இந்திய டெஸ்ட் வரலாற்றில் 4வது வீரர்.. ஸ்வீப் ஸ்டார் சர்ப்ராஸ் கான் ஸ்பெஷல் சாதனை

0
540
Jaiswal

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையாகவும் இருந்தது.

இந்த நிலையில் முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று சிறப்பாக செயல்பட்டு இருந்தது. மேலும் மூன்றாவது போட்டிக்கு ரவீந்திர ஜடேஜா உள்ளே வர, ரவிச்சந்திரன் அஸ்வின் அவசர மருத்துவ காரணத்திற்காக வெளியே சென்றார்.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, இரண்டாவது டெஸ்ட் போட்டியை விட மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேலும் முன்னேறி செல்வதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இந்திய அணியின் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் இளம் அறிமுக வீரர் சர்பராஸ் கான், யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நெருக்கடிகளுக்கும் மத்தியில் அதிரடியாக விளையாடி, அரை சதம் அடித்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

முதல் இன்னிங்ஸில் அவர் விளையாடிய வேகத்திற்கு எப்படியும் சதம் அடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் தெரிந்தது. அறிமுக டெஸ்ட் போட்டியில் சதத்தை அவர் தவற விட்டு விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 72 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் சர்பராஸ் கான் அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 50 ரன்கள் கடந்த வீரர் என்கின்ற வகையில், நான்காவது இந்திய வீரராக சிறப்பு பட்டியலில் நுழைந்து இருக்கிறார். இதற்கு முன்பாக மூன்று இந்தியர்கள் மட்டுமே இதைச் செய்திருந்தார்கள்.

இதையும் படிங்க : இது எங்க கோட்டை.. பாஸ்பாலுக்கு ஜெய்ஸ்வால் மிரட்டல் அடி.. மெகா டார்கெட்.. இந்தியா முன்னிலை

அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:

திலாவர் ஹுசைன் – இங்கிலாந்து (1934)
சுனில் கவாஸ்கர் எதிராக – வெஸ்ட் இண்டீஸ் (1971)
ஷ்ரேயாஸ் லியர் – நியூசிலாந்து (2021)
சர்ஃபராஸ் கான் – இங்கிலாந்து (2024)*