நான் இந்த ஒரு விஷயத்துல ஏமாந்துட்டேன்.. ஆனா சிமிர்ஜித் கலக்கிட்டாரு – சஞ்சு சாம்சன் பேட்டி

0
829
Sanju

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தோல்விக்கான காரணங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் ஆடுகளம் எதுவாக இருக்க ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். 20 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரியான் பராக் 35 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் சிமர்ஜித் சிங் சிக்கனமாக செயல்பட்டதோடு மூன்று விக்கெட்டையும் கைப்பற்றினார்.

- Advertisement -

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி 18.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பொறுமையாக விளையாடிய ஆட்டம் இழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “பவர் பிளேவுக்கு பிறகு ஆடுகளம் மெதுவாக இருக்கிறது என்கின்ற மெசேஜ் வந்திருக்கிறது. நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் முடிந்த பிறகு 170 ரன்கள் எடுக்க வேண்டுமென்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதேசமயத்தில் சிமர்ஜித் சிங் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

வெளி ஆடுகளத்தில் விளையாடும் போது என்ன எதிர்பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். இந்த மைதானம் சிஎஸ்கே அணியினருக்கு பழகியது என்பதால் அவர்களுக்கு இலக்கு துரத்துவது குறித்து நல்ல தெளிவும் பழக்கமும் இருந்தது. ஆனால் நான் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது இன்னும் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று கணக்கு போட்டேன். ஆடுகளம் அவர்கள் பேட்டிங் செய்யும்பொழுது பெட்டர் ஆகிவிட்டது.

இதையும் படிங்க : 1119 நாட்கள்.. ருதுராஜ் கிளாஸ்.. ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே.. பிரகாசமான பிளே ஆஃப் வாய்ப்பு

குறிப்பாக கோடை காலத்தில் இரவில் பனிப்பொழிவு வரும் என்பதால், நீங்கள் இரண்டாவது பந்து வீசுவது சரியான முடிவு கிடையாது. இது பகல் போட்டி என்கின்ற காரணத்தினால் உண்மையில் இரண்டாவது பகுதியில் இன்னும் வேகம் குறையும் எனத்தான் நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. தகுதி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டே இருப்பது இயல்பானது. ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருப்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். என் அணி வீரர்களுக்கும் இதைத்தான் சொல்கிறேன். நாங்கள் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வெற்றி பெற வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -