இது எங்க கோட்டை.. பாஸ்பாலுக்கு ஜெய்ஸ்வால் மிரட்டல் அடி.. மெகா டார்கெட்.. இந்தியா முன்னிலை

0
289
Jaiswal

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், அந்த அணிக்கு மிக பிரம்மாண்டமாக 556 ரன்கள் என்கின்ற இலக்கை நிர்ணயித்து அசத்தியிருக்கிறது.

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலை பெற்று, தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருக்கிறது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு கடைசி ஒன்றரை நாட்களில் 556 ரன்கள் என்கின்ற பிரம்மாண்ட இலக்கை இந்திய அணி நிர்ணயித்திருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி வெற்றிக்கு அருகிலும் இருக்கிறது என்று கூறலாம்.

இன்று இந்திய அணி தொடர்ந்து விளையாடியதில் சுப்மன் கில் 91 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டு துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து நேற்று காயத்தின் காரணமாக வெளியேறிய ஜெய்ஷ்வால் இன்று மீண்டும் திரும்ப வந்து வானவேடிக்கை காட்டினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இந்த தொடரிலும் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கேரியரிலும் இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.

இவருடன் இணைந்து விளையாடிய சர்பராஸ் தான் இரண்டாவது அரைசதத்தை தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அடித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் 236 பந்துகள் சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்களுடன் 214, சர்பராஸ் கான் 72 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்திருக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிக்ளர் செய்தார். இதற்கு அடுத்து இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கி இருக்கிறது.