ஸ்டெம்பில் படாத பந்து.. ஆனாலும் ஜடேஜாவுக்கு ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

0
3078
Jadeja

சிஎஸ்கே அணி இன்று ஐபிஎல் தொடரில் தங்களது சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வித்தியாசமான ரன் அவுட் ஒன்று கொடுக்கப்பட்டது. இதுகுறித்து பல ரசிகர்களுக்கு புரியாமல் இருந்து வருகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமான கருப்பு மண் மெதுவான ஆடுகளத்தில், ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த பொழுதும் கூட 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. ரியான் பராக் 35 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே தரப்பில் இன்னிசை ரச்சின் ரவீந்திரா அதிரடியாக தொடங்கினாலும் கூட, அவர் 18 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த முறை மூன்றாவது இடத்தில் வந்த நேரில் மிட்சலும் அதிரடியாகவே ஆரம்பித்தார். அவரும் நிலைக்க முடியாமல் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறி விட்டார்.

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 14 ஓவர்களுக்கு 107 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா கேப்டன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்தார். ஒருமனையில் ருதுராஜ் பொறுமையாக கடைசி வரை விளையாட முடிவு செய்திருக்க, ஜடேஜா அதிரடியாக விளையாடுவதற்கு முயற்சி செய்தார்.

இந்த நிலையில் ஆவேஷ் கான் ஓவரில் கட் ஷாட் அடித்து ஜடேஜா 2 ரன்கள் எடுக்க முயற்சி செய்தார். அப்பொழுது ஜடேஜா இரண்டாவது ரன்களுக்கு பாதி தூரம் ஓடிவிட, பேட்டிங் முனைக்கு சென்ற ருதுராஜ் திரும்பி வரவில்லை. சுதாரித்த ஜடேஜா பந்துவீச்சு முனைக்கு திரும்பி ஓடினார். அப்பொழுது பந்தை பிடித்த சஞ்சீவ் சாம்சன் குறிவைத்து அடிக்க, பந்து ஜடேஜா மேல்தான் பட்டது. ஆனாலும் அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். இது ஜடேஜா வரை ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு என்னோட வேலை இதுவாதான் இருந்தது.. அதுக்கு இந்த 2 முக்கிய காரணம் இருக்கு – ருதுராஜ் பேட்டி

கிரிக்கெட் விதிப்படி ஒரு வீரர் எந்த நேர்க்கோட்டில் ஓட ஆரம்பிக்கிறாரோ, அதே பாதையில் ஓட வேண்டும். பந்தை எடுத்து எதிர் அணி அடிக்கும் பொழுது, ஓடி கொண்டிருப்பவர் தன்னுடைய பாதையை மாற்றி, பந்தை தடுப்பது போல் வந்தால், பந்தை ஸ்டெம்பில் அடிக்காவிட்டால் கூட அவுட் கொடுக்கப்படும். நீங்கள் நடு ஆடுகளத்தில் ஓட ஆரம்பித்தால் கூட, தொடர்ந்து அப்படியேதான் ஓட வேண்டும். பந்தை எறியும் பொழுது பாதையை மாற்றக்கூடாது. ஜடேஜா சாம்சன் பந்தை எறியும் பொழுது பாதையை மாற்றி ஓடி பந்தை தடுத்ததால், அம்பயர் அவருக்கு அவுட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.