“சர்ப்ராஸ் கான் வாய்ப்பை வீணடிக்க முடியாது.. காரணம் விராட் கோலி இருக்கார்” – ஹர்பஜன் சிங் பரபரப்பு பேச்சு

0
124
Harbajan

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து காயத்தின் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் விலகி இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரது இடத்திற்கு மாற்று வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், சர்பராஸ் கான் மற்றும் சவுரப் குமார் என மூன்று வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து விராட் கோலி வரும்பொழுது இதில் இருந்து ஒரு வீரர் வெளியே செல்ல வேண்டியதாக இருக்கும். மேலும் அணியில் ரஜத் பட்டிதார் இருக்கிறார்.

- Advertisement -

முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி இங்கிலாந்து அணி இடம் தோல்வியடைந்து இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணி மீதான விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக மாறி இருக்கிறது. காரணமாக அவர்களுக்கு நெருக்கடி கூடியிருக்கிறது.

தற்பொழுது விராட் கோலியின் இல்லாத காரணத்தினால் இந்திய பேட்டிங் யூனிட்டில் அனுபவம் வாய்ந்தவர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

இது குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” சர்பராஸ் கான் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அடுத்த போட்டியில் விராட் கோலி வரும்பொழுது யாராவது ஒரு வீரர் வெளியில் செல்ல வேண்டியதாக இருக்கும். அவரால் கிடைக்கும் ஒரு வாய்ப்பை வீணடிக்க முடியாது. அவர் மிகவும் கடினமாக உழைத்து உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் பேட்டிங் மிக பலவீனமாக தெரிகிறது. தற்பொழுது கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா வெளியேறி விட்டார்கள். முதல் டெஸ்டில் இவர்களது பங்களிப்பை கழித்து விட்டு பார்த்தால் பெரிதாக எதுவுமே இருக்காது. தற்பொழுது இந்திய பேட்டிங் யூனிட்டில் ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “அதிகாலை 3 மணி வரை.. விராட் கோலி என்னிடம் மன்னிப்பு கேட்டார்” – எல்கர் மீண்டும் அதிரடி

இந்திய அணியில் விராட் கோலி இருந்திருந்தால் அனுபவம் கொஞ்சம் கிடைத்திருக்கும். தற்பொழுது ஸ்ரேயாஸ் மற்றும் கில் ரன்கள் அடிக்க தடுமாறுகிறார்கள். ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் வெளியேறியிருக்கிறார்கள். இந்திய அணிக்கு இதனால் பிரச்சனைகள் அதிகமாகி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்