ஐபிஎல் பார்த்து தப்பு பண்ணாதிங்க.. இந்த பையன நேரா டி20 உலககோப்பை கூட்டிட்டு போங்க – ஸ்ரீகாந்த் கோரிக்கை

0
24110
Srikanth

இந்த வருடம் ஜூன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அணியை அறிவிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை இந்திய அணி குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முக்கிய விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முடிவடைந்ததும், அடுத்து டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணிக்கு 11 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருந்தது. இதில் மூன்று டி20 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே 14 மாதம் கழித்து வந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவின் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வரும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து, டி20 உலக கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சில முக்கிய இந்திய வீரர்களின் ஐபிஎல் செயல்பாடு சுமாராக இருந்து வருகிறது.

எனவே இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை அணி எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்கின்ற பெரிய குழப்பம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சர்வதேச டி20 போட்டிகளில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “என்னுடைய 15 பேர் கொண்ட டி20 உலக கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் நிச்சயம் இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடக்கத்தில் பேட்டிங் செய்வதற்கு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சாதனைகளை பார்த்தால் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவருக்கு இந்திய அணிகள் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் தற்போது அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா ரூட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. உலக கோப்பையை வெல்ல செம பிளான்.. புது பயிற்சியாளர்கள் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்யும் பொழுது, அந்த வீரர் யார் என்று பார்க்காமல், அவருடைய டி20 கிரிக்கெட் சாதனை என்னவென்று பார்க்க வேண்டும். அவர் சிறந்த வீரராக தகுதியானவரா? என்று பார்ப்பதுதான் முக்கியம். அவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக இருக்க வேண்டும். அவருக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைத்து, அவர் விமானத்தின் சீட் பெல்ட் போட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.