“கவாஸ்கர் சாரை என்னை மன்னிக்க சொல்லுங்க.. இனி அந்த தப்பை செய்யவே மாட்டேன்” – சர்ப்ராஸ் கான் கோரிக்கை

0
216
Sarfaraz

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 வீரர்கள் இந்திய தரப்பில் அறிமுகமானார்கள். இதில் மும்பையைச் சேர்ந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் 26 வயதான சர்பராஸ் கான் முக்கியமானவர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்ற இவர் தனது அறிமுக போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்து பிரமாதப்படுத்தினார். இதற்கடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.

- Advertisement -

ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் வந்து அரை சதம் அடித்தார். மொத்தம் ஐந்து இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கும் இவர் மூன்று அரை சதங்கள் அடித்து, இந்திய அணியில் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

அதே சமயத்தில் இவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் தேநீர் இடைவேளைக்கு பிறகான முதல் பந்திலேயே ரன் அடிப்பதற்காக சென்று, தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார். அந்த இடத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக விளையாடி இருந்தால் இவர் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்திருக்க முடியும்.

இது குறித்து இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்தார். டான் பிராட்மேனை உதாரணமாக வைத்து சர்பராஸ் கான் ஷாட் தேர்வு குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு துபாயை சேர்ந்த தொழிலதிபர் பாட்டியா மூலமாக கவாஸ்கர் இடம் சர்பராஸ் கான் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாட்டியா கூறும் பொழுது “அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன். இருவரும் தங்களது முதல் சந்திப்பில் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். கவாஸ்கர் சர்பராஸ் கான் இடம் ஷார்ட் செலக்சன் குறித்து அதிகம் கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால் இதற்குப் பிறகு அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இது கவாஸ்கரை கடுமையாக கோபப்படுத்தியது.

இதையும் படிங்க : தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்?.. தெளிவான பதில் சொன்ன சிஇஓ காசி விஸ்வநாதன்

இந்த நிலையில் அடுத்த நாள் மீண்டும் சர்பராஸ் கான் என்னுடன் இருந்தார். அவர் என்னிடம் ‘சார் தயவு செய்து கவாஸ்கர் சாரை என்னை மன்னிக்க சொல்லுங்கள். நான் தவறு செய்து விட்டேன். நிச்சயம் அந்தத் தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன்’ என்று கூறினார் என்று தெரிவித்திருக்கிறார்.