இன்று ஐபிஎல் தொடரின் 49 வது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் அரைசதம் அடித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே அணிக்கு இந்த போட்டியில் பத்திரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் விளையாடவில்லை. இங்கிலாந்து வீரர் க்ளிசன் சிஎஸ்கே அணிக்காக அறிமுகம் ஆனார்.
சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ரகானே 24 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த சிவம் துபே முதல் பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து டேரில் மிட்சல் அல்லது மொயின் அலி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளே அனுப்பப்பட்ட ரவீந்திர ஜடேஜா நான்கு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் ருதுராஜியுடன் இளம் வீரர் சமீர் ரிஸ்வி இணைந்து பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. இந்த ஜோடி 34 பந்தில் 37 ரன்கள் எடுத்தது. சமீர் ரிஸ்வி 23 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடித்து, மேலும் 10 போட்டிகளில் 500 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் விராட் கோலியையும் தாண்டினார். கடைசியில் ருதுராஜ் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே தோனியை வச்சு ஒரு செம பிளான் பண்ணி இருக்காங்க.. பேஸிக்கா அது சுதந்திரம் – கம்பீர் பேச்சு
இதற்கு அடுத்து உள்ளே வந்த தோனி 11 சந்தில் 14 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் முதல் முறையாக அவுட் ஆகி இருக்கிறார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி ஏழு விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்திருக்கிறது. பஞ்சாப் அணியின் தரப்பில் ஹர்பரித் பிரார் மற்றும் ராகுல் சஹார் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.