தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்?.. தெளிவான பதில் சொன்ன சிஇஓ காசி விஸ்வநாதன்

0
1072
Dhoni

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தான் இன்னும் ஒரு ஆண்டு சேர்த்து விளையாடுவது ரசிகர்களுக்கு கொடுக்கும் பரிசாக அமையும் என்று மகேந்திர சிங் தோனி கூறியிருந்தார்.

மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் காலில் ஏற்பட்டிருந்த காயத்துடன் மிகவும் கடினப்பட்டு ரசிகர்களுக்காக விளையாடவும் செய்திருந்தார். மேற்கொண்டு ஒரு ஐபிஎல் சீசன் ரசிகர்களுக்காக விளையாடுவதற்கு அறுவை சிகிச்சை செய்து, தனது உடல் தகுதியை திரும்ப கொண்டு வருவதில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் மார்ச் முதல் வாரத்தில் சென்னை வந்த மகேந்திர சிங் தோனி பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார். மேலும் இந்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அனைத்தும் முடிந்துவிட்ட காரணத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.

அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி தனது கடைசி ஐபிஎல் சீசன் எதுவென்று அறிவிக்காவிட்டாலும் கூட, நடக்க இருக்கும் ஐபிஎல் சீசனை அவருடைய கடைசி சீசனாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இதை சில செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் தோனிக்கு பிறகு அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்தான கேள்வி முன் வைக்கப்பட்டது. அதில் அவர் மிக முக்கியமாக அடுத்த கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார்? என்பதற்கான விவாதங்கள் சென்று கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறும்பொழுது “இதுகுறித்து எங்கள் அணிக்குள் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் திரு சீனிவாசன் அவர்கள் எங்களிடம் ‘ இது குறித்து யாரும் பேச வேண்டாம். அடுத்த கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார் என்று தற்போதையபயிற்சியாளரும் முடிவு செய்து என்னிடம் கூறுவார்கள். நான் எல்லோருக்கும் தெரிவிப்பேன். அதுவரை அனைவரும் அமைதியாக இருப்போம்” என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டார்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் முதலில் கவனம் செலுத்துவோம். அதுதான் எங்களின் முதல் நோக்கமாக எப்பவுமே இருந்து வந்திருக்கிறது. இப்போதும் நாங்கள் அதையேதான் பின்பற்றப் போகிறோம்.

இதையும் படிங்க : WTC பைனல் வாய்ப்பு.. எல்லா அணிகளும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.. முழு சர்வே

ஒவ்வொரு சீசனுக்கும் முன்பும் தோனி எங்களிடம் ‘ முதலில் லீக் சுற்றில் கவனம் செலுத்தி நாம் நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறுவோம்’ என்று கூறுவார். வெளிப்படையாக எங்களுக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால் நாங்கள் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் காட்டி வரும் நிலைத்தன்மையின் காரணமாக, இந்த அழுத்தம் எங்களுக்கு பழகிய ஒன்றாக மாறிவிட்டது” எனக் கூறி இருக்கிறார்.