என்னது ஸ்ட்ரைக் ரேட் முக்கியமில்லையா?.. செட்டில் ஆக டைம் எல்லாம் கேட்க முடியாதுங்க – சஞ்சு சாம்சன் பேட்டி

0
163
Sanju

டி20 கிரிக்கெட்டில் ஆடுகளத்திற்கு தகுந்தது போல் விளையாடுவது? அல்லது அடித்து விளையாடி நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதா? என்பது குறித்து விவாதங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் டி20 கிரிக்கெட் ஆக இருந்தாலும் ஆடுகளத்திற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும், இங்கு ஸ்ட்ரைக் ரேட் என்பது முக்கியமான விஷயம் கிடையாது என்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

இதேபோல் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்த போட்டியில், பட்லர் அதைவிட வேகமாக சதம் அடித்து ராஜஸ்தான் அணியை வெல்ல வைத்தார். விராட் கோலி சதம் அடித்த பொழுது கூட, அவர் மெதுவான சதம் அடித்ததாக கூறி அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து சஞ்சு சாம்சன் இடம் கேள்வி கேட்ட பொழுது “இது 20 ஓவர் போட்டி. ஒவ்வொரு ஓவரிலும் ஐந்து சதவீத ஆட்டம் இருக்கிறது. இந்த விளையாட்டை பொறுத்த வரையில், எனக்கு செட்டில் ஆக நேரம் தேவை, நான் பத்து ரன்கள் எடுத்த பிறகுதான் சிக்ஸர் அடிப்பேன், இந்தக் குறிப்பிட்ட பவுலரை அடிக்க மாட்டேன், மேலும் கடைசியில்தான் அடித்து விளையாடுவேன் என்றெல்லாம் சொல்லவே முடியாது.

இந்த டி20 வடிவ கிரிக்கெட்டில் ஒரே ஒரு நோக்கம் மட்டுமே இருக்கிறது. நீங்கள் நேராக விளையாட சென்று உடனே பவுண்டரிகளை தேட வேண்டும். இந்த நோக்கத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் சித்தர்களை தேடி, போட்டியில் தாக்கத்தை சீக்கிரத்தில் கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க: டிராவிட் நான் விமர்சனம் செய்யல.. அறிவுரைதான் சொல்றேன்.. இவங்கள நம்பாதிங்க – பிரையன் லாரா பேட்டி

இங்கு தனிப்பட்ட வீரர் அடிக்கும் ரன்கள் முக்கியமானது கிடையாது. இந்த வடிவ கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நீங்கள் உள்ளே சென்று டாமினேட் செய்ய வேண்டும், இல்லை உங்களுடைய அணியினர் யாராவது டாமினேட் செய்ய வேண்டும். இப்படி யாருமே செய்யாவிட்டால், அந்த போட்டியில் உங்களுடைய அணி தோல்வி அடைந்து விடும். இங்கு இரண்டாவது கியர் என்பது கிடையவே கிடையாது. நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். இதுதான் டி20 கிரிக்கெட் பற்றிய எனது நம்பிக்கை” என்று கூறியிருக்கிறார்