டிராவிட் நான் விமர்சனம் செய்யல.. அறிவுரைதான் சொல்றேன்.. இவங்கள நம்பாதிங்க – பிரையன் லாரா பேட்டி

0
2070
Lara

நடப்பு ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு, தொடரில் பங்குபெறும் முக்கிய அணிகளின் அணி நிர்வாகங்கள் அனைத்து விதமான தயாரிப்புகளையும் மிக வேகமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா ஒரு முக்கிய அறிவுரையை கூறியிருக்கிறார்.

தற்போது டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பேட்டிங் யூனிட்டில் அனுபவ வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் இருக்கிறார்கள். மேலும் பவுலிங் யூனிட்டில் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சிவம் துபே தனது அறிமுக உலகக்கோப்பையில் விளையாட இருக்கிறார். மற்றபடி பெரும்பாலும் உலகக் கோப்பை மற்றும் சர்வதேச போட்டி அனுபவங்கள் கொண்டவர்கள் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கிறார்கள். அனுபவத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால், உலகக் கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான அணியாக இருக்கிறது.

தற்பொழுது சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கும் இந்திய அணியைப் பற்றி பிரையன் லாரா கூறும்பொழுது ” சில சமயம் நம்முடைய அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களை கொண்டிருக்கும் பொழுது, நாம் திட்டங்களை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் வீரர்களுடன் ஒட்டிக் கொள்வோம். ஏனென்றால் அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று நாம் நம்புவோம். இப்படித்தான் நாங்கள் 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் அணியாக சென்று அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

உங்களிடம் இதுபோன்ற சிறந்த வீரர்கள் இருக்கும்பொழுது நீங்கள் அவர்களுடைய அனுபவத்தில் ஒட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள். ஏனென்றால் அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள். நீங்கள் நினைப்பது பெரிய தவறும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : உங்களுக்கெல்லாம் எதுக்கு டெக்னாலஜி?.. அதை இனிமேல் நீங்க தொடவே தொடாதிங்க – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

உங்களிடமிருந்து நிறைய உற்சாகமான இளம் வீரர்கள் வெளியில் வருகிறார்கள். எனவே உங்களுக்கும் இந்த இடத்தில் சில புதிரான விஷயங்கள் இருக்கிறது. எனவே ராகுல் டிராவிட் நான் சொல்வதை விமர்சனமாக எடுக்காமல் அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் ஒரு திட்டத்தை உறுதி செய்து கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ரிங்கு சிங் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணி இழந்து இருந்தாலும் கூட, நிச்சயமாக இந்த அணி உலக கோப்பையை வெல்ல முடிந்த அணி” எனக் கூறியிருக்கிறார்.