ஜெய்ஸ்வாலால் எங்க டீம் ஊழியர்கள் காயமடைகிறார்கள்.. என்ன பண்றதுனு தெரியல – சஞ்சு சாம்சன் பேச்சு

0
491
Jaiswal

இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட காலம் கழித்து ஜெய்ஸ்வால் இடதுகை துவக்க ஆட்டக்காரராக கிடைத்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் இரண்டு இரட்டை சதங்கள் உடன் 712 ரன்கள் குவித்தவுடன், ஜெய்ஸ்வால் பேட்டிங் மீதான மதிப்பு மிகவும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதாலும், இதற்கு அடுத்து டி20 உலகக்கோப்பை நடைபெற இருப்பதாலும், டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான இரண்டு பெரிய தொடர்களில் அவர் எப்படி செயல்படுவார்? என்கின்ற பெரிய எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2020 ஆம் ஆண்டு 2.40 கோடி ரூபாய்க்கு ஜெய்ஸ்வாலை முதன் முதலில் வாங்கியது. இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தின் போது இவரை வெளியே விடாமல், அப்பொழுது இவர் இந்திய அணிக்கு ஆடியிருக்காத காரணத்தினால் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது.

இதுவரை மொத்தம் நான்கு ஐபிஎல் சீசன்களில் விளையாடி இருக்கும் இவருக்கு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் சிறந்த ஒன்றாக அமைந்தது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன், 48 ரன் ஆவரேஜில்,163 ஸ்ட்ரைக்ரேட்டில் 625 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதற்குப் பிறகு அவருக்கு 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் முதன் முதலில் டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக இடம் கிடைத்தது. முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி சதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்து விட்டார். மேற்கொண்டு இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் மொத்தமாக குவித்ததில், இவருடைய மதிப்பும் இவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சியால் அணி ஊழியர்கள் காயம்

மேலும் ஜெய்சுவால் பேட்டிங் பயிற்சியில் சலிப்பில்லாமல் ஈடுபடக்கூடிய வீரர். ராபின் உத்தப்பா இவரைப் பற்றி கூறும் பொழுது மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து இரவு 12:30 மணி வரை பயிற்சி செய்து பார்த்திருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இவர் கிரிக்கெட்டையே சுவாசித்து கிரிக்கெட்டையே சாப்பிட்டு உயிர் வாழக்கூடிய மனிதன் என்றும் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே அடுத்த கேப்டனாக.. தோனியின் கண் இவர் மேல்தான் இருக்கும் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “வலை பயிற்சியில் அதிக நேரம் இருக்கக்கூடிய வீரர் என்றால் அது ஜெயஸ்வால்தான். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ந்து வலையில் கடுமையாக பயிற்சி செய்கிறார். இவருக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசி வீசி எங்கள் அணி ஊழியர்களின் தோள்பட்டை காயம் அடைந்து விட்டது. இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். வீரர்களுக்கு காயம் அடைவது போய் தற்பொழுது ஊழியர்கள் ஜெய்ஸ்வால் பயிற்சியால் காயம் அடைகிறார்கள்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.