கோலி நேற்று மெதுவா விளையாடல.. சரியாக விளையாடினார்.. இந்த காரணங்களை பாருங்க – ஆரோன் பின்ச் ஆதரவு

0
93
Virat

டி20 உலகக்கோப்பை துவங்குவதற்கு நடுவில் ஒரு மாதம் இருக்கும் நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடுகளம் எப்படி இருந்தாலும், விராட் கோலி சதமே அடித்தாலும், அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றியான விவாதங்கள் நிறைய நடக்க ஆரம்பித்திருக்கிறது. இது குறித்து விராட் கோலிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பேசியிருக்கிறார்.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாப் டு பிளேசிஸ் உடன் முதல் விக்கெட்டுக்கு 23 பந்தில் 48 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைந்தது. இதற்கு அடுத்து வில் ஜேக்ஸ் வர 19 பந்தில் 17 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் வந்தது.

- Advertisement -

பவர் பிளேவில் மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடிய விராட் கோலி, பவர் பிளே முடிந்து அடுத்த ஏழு, எட்டு ஓவர்கள் வரை விளையாடிய பொழுதும், அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதிரடியாக விளையாட அவர் முயற்சி செய்தும் பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. இறுதியாக அவர் 43 பந்தில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

துவக்க வீரராக வந்து 118 ஸ்ட்ரைக் ரேட்டில் 15 ஓவர்களில் ஆட்டம் இழந்து செல்வது அணிக்கு சரியான ஒன்றாக இருக்காது என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக நேற்று இது குறித்து சுனில் கவாஸ்கர் விராட் கோலி பேட்டிங் மீதான தனது விமர்சனத்தை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் “விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது இங்கு பல விஷயங்களின் கலவை என்று நான் நினைக்கிறேன். அவர் எடுத்தது முழுமையான அதிரடியில் இறங்கினார். ஆனால் பவர் பிளேவுக்கு பிறகு அவர் 19 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், இந்த நேரத்தில் ரஜத் பட்டிதார் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்து விட்டார். சில சமயம் செட் ஆன பேட்ஸ்மேன் ஆக உங்களுடைய வேலை, அதிரடியாக விளையாடக்கூடிய வீரருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அவருக்கு அதிகம் ஸ்டிரைக் கொடுப்பதுதான்.

இதையும் படிங்க: நாங்க தோக்கல.. வித்தியாசமா முயற்சி செய்தோம்.. டி20 உலககோப்பைல பாருங்க – கேப்டன் பாபர் அசாம் பேச்சு

நீங்கள் விராட் கோலியின் பேட்டிங்கை தனித்து பார்த்தால் அவர் மெதுவாக விளையாடியதாக தெரியும். அதே பார்ட்னர்ஷிப்பில் வைத்துப் பார்த்தால் அவர் மிகச் சரியாகவே விளையாடி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில் அவர் அதிகம் இல்லாமல், படிதாரை அந்த இடத்திற்கு கொண்டு வந்ததன் மூலம், அவர் மிகச் சரியாகவே செயல்பட்டு இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -