சிஎஸ்கே அடுத்த கேப்டனாக.. தோனியின் கண் இவர் மேல்தான் இருக்கும் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

0
284
Raina

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி, இந்த வருடத்துடன் 16 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்கு 15 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். இந்த வகையில் கேப்டன் பொறுப்பில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு தனி சாதனை பட்டியலே அவருக்கு இருக்கிறது.

தற்போது தோனிக்கு 42 வயதாகின்ற காரணத்தினால், அவருக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா? என்பதை விட, அவருக்கு அடுத்து யார் சி எஸ் கே அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துவார்கள்? என்கின்ற கேள்வி மிக முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் 2022 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தொடர்ந்து விளையாடக்கூடிய சூழ்நிலையில் இருந்தும் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பை மாற்றிக் கொடுத்தார். தான் அணியில் விளையாடும் பொழுதே கேப்டனாக இன்னொருவருக்கு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதில் முக்கியத்துவத்தை அவர் புரிந்திருந்தார்.

எனவே தற்பொழுதும் மகேந்திர சிங் தோனி இதே முறையில் சிஎஸ்கே அணிக்கான அடுத்த கேப்டனை தான் விளையாடும் பொழுதே கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்புக்கு சரியான வீரராக இல்லாத ஜடேஜாவை கொண்டு வந்தது போல் இருக்கக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

தோனியின் கண் யார் மேல் இருக்கும்?

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான வீரர்களில் தோனிக்கு அடுத்த இடத்தை மிக நெருக்கமாக பிடிக்க கூடிய சுரேஷ் ரெய்னா, அடுத்த கேப்டனாக தோனியின் பார்வை எந்த வீரர் மேல் இருக்கும்? என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். மேலும் ஓய்வுக்குப் பிறகு சிஎஸ்கே அணியில் தோனி எப்படியான பொறுப்பில் இருப்பார் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும் பொழுது “சிஎஸ்கே அணியிலிருந்து அடுத்த கேப்டன் யார்? என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. தோனி ஓய்வு பெற்று விட்டாலும் கூட சிஎஸ்கே அணியின் மனவலிமை பயிற்சியாளராகவோ அல்லது அவர் அணிவுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவோ இருப்பார். ஆனால் அடுத்த கேப்டனாக தோனி யார் மீது கண் வைத்து இருப்பார்? என்றால், அந்த வீரர் ருதுராஜாக இருக்கலாம். அவர் நல்ல தேர்வாக இருப்பார்.

இதையும் படிங்க : நான் இந்த பையனுக்காக வெயிட் பண்ண முடியல ஐபிஎல்-ல் மினிமம் 600 ரன் எடுப்பார் – ஏபி.டிவிலியர்ஸ் பேச்சு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியை விட சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவர்கள் அடுத்த கேப்டனாக யாரிடம் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். நான் 2008 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பை கவனித்து வருகிறேன் எனவே நீங்கள் இதற்கு மேல் பாருங்கள் என்று தோனி கூறலாம். அவருக்கு 42 வயது ஆனாலும் கூட இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடலாம். இல்லை இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் விளையாடலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று கூறி இருக்கிறார்.