விராட் கோலி அவுட் ஆனா அந்த உண்மைய ஒத்துக்கவே மாட்டார்.. ரெண்டு நாளைக்கு முன்ன அதுதான் நடந்தது – மஞ்ச்ரேக்கர் பேச்சு

0
44
Virat

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டம் இழந்தால் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று முன்தினம் லக்னம் அணிக்கு எதிரான போட்டியில் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் விராட் கோலி இரண்டு பந்துகளை சந்தித்து கிளீன் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிகச் சிறப்பான பந்து

விராட் கோலி ஆட்டம் இறந்த அந்த பந்தை பவுலர் வெளியில் வெளியில் ஸ்விங் செய்வது போல தையலை வைத்து வீசி இருந்தார். ஆனால் பந்து ஆடுகளத்தில் பட்டு உள்ளே வந்து விராட் கோலி கிளீன் போல்ட் ஆனார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பிரின்ஸ் யாதவ் மிகச் சிறப்பாக வேகப்பந்துவீச்சில் செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு சீக்கிரத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விராட் ஏற்றுக்கொள்ள மாட்டார்

இதுகுறித்து சஞ்சய் மன்ஞ்ரேக்கர் பேசும்போது “விராட் கோலி பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததும் பந்து ஏதோ தாழ்வாக வந்து பட்டுவிட்டது போல ஆடுகளத்தை குறை சொல்லி பார்த்தார். அவர் சிறந்த பந்தில் ஆட்டம் இழந்ததாக காட்டிக் கொள்ளவில்லை. அவர் உண்மையில் பந்தில் ஏதோ தவறு இருப்பதாகவே நினைத்தார். சச்சின் கடைசி வரையில் அப்படித்தான் அவுட் ஆகும்போது காட்டிக் கொள்வார்”

இதையும் படிங்க : பிரின்ஸ் யாதவ் மன்னன் விராட்டை தூக்கியது தெய்வீக பந்துவீச்சு.. இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

“இவர்கள் இதனால்தான் சாம்பியன் வீரர்களாக இருக்கிறார்கள். தாங்கள் தவறு செய்யவில்லை பந்துதான் ஏதோ தவறாக வந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். இதனால் இவர்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மற்ற வீரர்கள் பந்து சிறப்பானதாக இருந்ததாக நினைப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -