நான் சொன்ன அறிவுரையால நம்ம இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் கோபப்பட்டார்.. ஆனா அதுதான் அவரை மாற்றுச்சு – ராபின் உத்தப்பா பேட்டி

0
0

​இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் தனது ஆரம்ப கால கட்டத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவரது பேட்டிங் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவிய உத்வேகமான சம்பவம் குறித்து முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

​இந்திய அணிக்காக பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் களமிறங்கி ரன்களைக் குவித்து வரும் கே.எல். ராகுல், கிரிக்கெட் உலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அணியின் தேவைக்கேற்ப எந்த பொசிஷனிலும் இறங்கி விளையாடும் இவரது பன்முகத்தன்மை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

​இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்போது “பின்னர் நாங்கள் ரஞ்சி டிராபி தொடரில் ஒன்றாக விளையாடியபோது, தான் சிறுவனாக இருந்தபோது நான் அளித்த அந்த அட்வைஸ் தனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியதாக அவர் என்னிடம் கூறினார். ஆனால் அந்த அறிவுரைதான் தனது பவர் கேமை மேம்படுத்திக் கொள்ள தன்னை உந்தியது என்றும் அவர் தெரிவித்தார். முன்பு அவரிடம் பவர் ஷாட் அடிக்கக் கூடிய பலம் இருக்கவில்லை, ஆனால் இப்போது அவர் ஒற்றை இலக்குடன் விளையாடி கிரவுண்டின் எந்த மூலையிலும் சாதாரணமாக சிக்ஸர்களை பறக்க விடுகிறார். உச்ச கட்ட கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற அவரது அசைக்க முடியாத ஆசையே இதற்கு முக்கிய காரணமாகும்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் “கே.எல். ராகுலின் அடிப்படை கிரிக்கெட் மிகவும் வலுவானதாக இருந்தது. அவர் மிகவும் ஒல்லியாகவும், உடல்ரீதியாக அதிக பலம் இல்லாதவராகவும் வளர்ந்தார், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அவர் மிகத் திறமையான பேட்டராக இருந்தார். நாங்கள் கே.பி.எல் தொடரில் ஒரே அணியில் விளையாடியதை நினைவுகூறுகிறேன், அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் வெறும் 30 ரன்கள் மட்டுமே, மேலும் அவர் 30 யார்டு வட்டத்தைத் தாண்டி பந்துகளை அடிப்பது கடினமாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​இறுதியாக அவர் கூறும்போது “அவர் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் தனது பலவீனங்களை மாற்றி உலகத் தரம் வாய்ந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். இளம் வீரர்களுக்கு அவரது இந்த பயணம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது. ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை நம்பி தொடர்ந்து உழைத்தால் எந்த ஒரு கடிமான சூழ்நிலையையும் தாண்டி உயரத்தை அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -