பிரின்ஸ் யாதவ் மன்னன் விராட்டை தூக்கியது தெய்வீக பந்துவீச்சு.. இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
36
Akash

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் பிரின்ஸ் யாதவ் அபாரமான பந்துவீச்சில் விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களில் வேகப்பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நிறைய பேட்ஸ்மேன்கள் கிடைக்கும் ஐபிஎல் தொடரில் பவுலர்கள் கிடைப்பது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்ன சிறப்பு?

பிரின்ஸ் யாதவ் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுகிறார். மேலும் அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடிகிறது. இத்துடன் அவரது பந்து நல்ல முறையில் சீம் ஆகிறது. இதனால் புதிய பந்தில் இவரை எதிர்த்து விளையாடுவது கடினமாக அமைந்திருக்கிறது.

இவர் விராட் கோலிக்கு எதிராக கடைசியாக வீசிய பந்து மிகவும் சிறப்பான ஒரு பந்தாக பார்க்கப்படுகிறது. பந்தின் தையலை வைத்து பார்க்கும் போது அது வெளியில் செல்வது போல தெரிந்தது. ஆனால் ஆடுகளத்தில் பட்டதும் உள்ளே வந்து விராட் கோலி கிளீன் போல்ட் ஆனார்.

- Advertisement -

தெய்வீக பந்துவீச்சு

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது ” நீங்கள் மன்னன் ஆக வேண்டும் என்றால் மன்னனை வீழ்த்த வேண்டும். இதைத்தான் பிரின்ஸ் யாதவ் விராட் கோலியை வீழ்த்தி காட்டி இருக்கிறார். அந்தப் பந்து தையலை பார்க்கும்போது வெளியில் செல்வது போல நமக்கு தெரிந்தது. ஆனால் வந்து திடீரென உள்ளே வந்தது. இந்தப் பந்தை யாராலும் விளையாட முடியாது”

இதையும் படிங்க : இந்திய அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்.? தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்.. வெளியான முக்கிய காரணம்

“கமெண்டரியில் இதை பார்த்த நியூசிலாந்து முன்னாள் பவுலர் மெக்லேகன் தெய்வீக பந்துவீச்சு என வர்ணித்தார். இவர் இதே வகையில் செயல்பட்டு கொண்டு வருகின்ற காரணத்தினால் நான் சொல்கிறேன் நிச்சயம் இந்திய அணிக்கு சீக்கிரத்தில் விளையாட போகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -