“2வது டெஸ்ட்.. ரெண்டு பேர்ல இந்த பையனை செலக்ட் பண்ணாதிங்க.. அது ஓவர் ரியாக்சன்” – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
153
Rajat

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்கு என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வருகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

அதே சமயத்தில் கேஎல்.ராகுல் இடத்துக்கு ரஜத் பட்டிதார் இல்லை சர்பராஸ் கான் இருவரில் யாரை தேர்வு செய்வார்கள்? என்பதும் சுவாரசியமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் வேகப்பந்து வீச்சுக்கு பும்ரா மட்டும் போதும் என முடிவுக்கு வந்து, சிராஜை நீக்குவதாக இருந்தால், அவரது இடம் முழுமையான பேட்ஸ்மேனுக்கு கொடுக்கப்படுமா? இல்லை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்கப்படுமா? என்கின்ற கேள்விகள் இருக்கின்றன.

மேலும் இரண்டு முழுமையான புதிய பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றால், அடுத்து விராட் கோலி வரும்பொழுது, வாய்ப்பு கொடுக்கப்படாத வீரர் வெறுமனே அணியை விட்டு வெளியே செல்ல வேண்டியது இருக்கும்.

தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது மாநில அணியான மும்பை அணியின் வீரர் சர்ப்ராஸ் கானை விட்டு ரஜத் பட்டிதாரை தேர்வு செய்ய வேண்டும் என ஆதரவு தெரிவித்திருக்கிறார். மும்பையை அவர் எப்பொழுதுமே விட்டு தரமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை வித்தியாசமான கருத்து அவரிடம் வந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கேஎல் ராகுல் இடத்துக்கு ரஜத் பட்டிதார் வரவேண்டும். ஏனென்றால் அவர் ஏற்கனவே அணிக்குள் விராட் கோலி இடத்திற்கு வந்திருக்கிறார். விராட் கோலி இடத்தில் கே.எல். ராகுல்தான் விளையாடியிருக்கிறார். எனவே வரிசைப்படி அவருக்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இந்த இடத்தில் அவரைத் தாண்டி இங்கிலாந்து வழியில் ஸ்வீப் ஷாட் நன்றாக விளையாடுகிறார் என்று சர்ப்ராஸ்கான் தேர்ந்தெடுப்பது ஓவர் ரியாக்சன் ஆக இருக்கும்.

இந்தியா பல ஆண்டுகளாக டர்னிங் பிட்ச்சுகளில் வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வந்திருக்கிறது. தற்போதுள்ள நிலைமைக்கு மூன்று நல்ல பேட்ஸ்மேன்களை கண்டறிய வேண்டியது இருக்கிறதா இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உணர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : “எல்லோரையும் பார்க்க மனசு வருத்தமா இருந்துச்சு.. 500-600 பந்துகள் விளையாடறேன்” – சர்பராஸ் கான் சிறப்பு பேட்டி

மேலும் அவர் ரவீந்திர ஜடேஜா இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர் இல்லை குல்தீப் யாதவ் இருவரில் யாரை கொண்டு வர வேண்டும் என கேட்ட பொழுது, உடனடியாக குல்தீப் யாதவ் பெயரை ஆதரித்தார்.