வெளியே இருக்கப்பவே தெரிஞ்சது.. சுனில் நரைனை வச்சு ஒரு பிளான் போட்டு முடிச்சிட்டேன் – ஷஷான்க் சிங் பேட்டி

0
11306
Shashank

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி, ரன் சேஸ் செய்வதில் உலக சாதனை படைத்து ஜெயித்திருக்கிறது. போட்டிக்குப் பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷஷாங்க் சிங் வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 71 ரன்கள், பில் சால்ட் 75 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி அதிரடியாக ஆறு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 261 ரன் குவித்தது. எனவே இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று கணிக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளேவில் 93 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து ஆட்டம் இழக்காமல் ஜானி பேர்ஸ்டோ 48 பந்தில் 108 ரன்கள் குவித்தார்.

இவருடன் இணைந்த நம்பிக்கை நட்சத்திரம் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் ஆட்டம் இழக்காமல் அடித்து நொறுக்கினார். இவர் ஜானி பேர்ஸ்டோ உடன் 37 பந்துகளில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். இதில் இவர் மட்டுமே அதிகப்படியாக 28 பந்துகளை சந்தித்ததோடு, அதில் 68 ரன்களையும் குவித்து மிரட்டினார்.

வெற்றிக்குப் பின் பேசிய ஷஷாங்க் சிங் “நான் டக் அவுட்டில் இருந்த பொழுது ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆடுகளத்தில் இருந்து பந்து நல்ல பவுன்ஸ் உடன் வந்து கொண்டிருந்தது. சுனில் நரைன் பந்துவீச்சை விட்டு விட்டு, மற்ற பந்துவீச்சாளர்களை அடித்து விளையாட முடிவு செய்திருந்தேன். எனக்கு அணியின் பயிற்சியாளர் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவர் என்னை முடிந்த வரையில் விளையாடச் சொன்னார்.

- Advertisement -

இதையும் படிங்க : 262 ரன்.. டி20 சேசிங்கில் உலக சாதனை.. பேர்ஸ்டோ ஷஷாங்க் சிங் வெறித்தன பேட்டிங்.. பஞ்சாப் அணி கொல்கத்தாவை வென்றது

100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பேர்ஸ்டோ போன்ற ஒருவர் உங்களுக்கு மறுமுனையில் இருந்து சப்போர்ட் செய்யும் பொழுது, நீங்கள் விளையாடுவதை பார்த்து கைத்தட்டி பாராட்டும் பொழுது அதைவிட பெரிது கிடையாது. எங்களிடம் இன்னும் ஐந்து போட்டிகள் இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொள்வோம். எங்களால் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.