262 ரன்.. டி20 சேசிங்கில் உலக சாதனை.. பேர்ஸ்டோ ஷஷாங்க் சிங் வெறித்தன பேட்டிங்.. பஞ்சாப் அணி கொல்கத்தாவை வென்றது

0
665
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரன் துரத்தலில் உலக சாதனை படைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக விளையாடியது. அந்த அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. சுனில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உடன் 71 ரன்கள் எடுத்தார். பில் சால்ட் 37 பந்துகளில் 6 பவுண்டர்கள், 6 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வெங்கடேஷ் ஐயர் 23 பந்தில் 39 ரன்கள், ரசல் 12 பந்தில் 24 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் முதல் ஆறு ஓவர்களில் வந்தது. பிரப்சிம்ரன் சிங் 20 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். அடுத்து ரைலி ரூசோ 39 பந்தில் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில், 16 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 45 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் உடன் சதம் அடித்து அசத்தினார். இதற்கு அடுத்து ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெறும் 37 பந்தில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜானி பேர்ஸ்டோ 48 பந்தில் 8 பவுண்டரி 9 சிக்ஸர் உடன் 108* ரன்கள், ஷஷாங்க் சிங் 28 பந்தில் 2 பவுண்டரி 8 சிக்ஸர் 68* ரன்கள் எடுத்தார்கள். பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் 6வது முறை.. உலக டி20 தொடர்களில் சாதனை.. பஞ்சாப் அணியை விளாசியது கொல்கத்தா அணி

இதன் மூலமாக உலக டி20 கிரிக்கெட் லீக்கில் அதிக ரன்னை சேஸ் செய்த அணி என்ற உலக சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த வருடம் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 224 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்து வந்தது. சேசிங்கில் எல்லா சாதனைகளையும் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது உடைத்திருக்கிறது.