எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் – ஜானி பேர்ஸ்டோ பேட்டி

0
11478
Shashank

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. வெற்றிக்குப் பின் சதம் அடித்த ஆட்டநாயகன் ஜானி பேர்ஸ்டோ வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு 10 புள்ளி 2 ஓவரில் முதல் விக்கெட் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. சுனில் நரைன் 32 பந்தில் 71 ரன், பில் சால்ட் 37 பந்தில் 75 ரன்கள் எடுத்தார்கள். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் அடித்து அசத்தியது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு பவர் பிளேவில் 93 ரன்கள் கிடைத்தது. பிரப் சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் இருவரும் அதிரடியாக 37 பந்தில் 84 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் இருந்து 18.4 ஓவரில் இலக்கை எட்டி, டி20 கிரிக்கெட்டில் ரன் சேஸில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது. ஜானி பேர்ஸ்டோ 48 பந்தில் 108 ரன்கள், ஷஷான்க் சிங் 28 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்கள். ஷஷாங்க் சிங் உள்ளே வந்து தேவைப்படும் நேரத்தில் எல்லாம் சிக்ஸர்களாக அடிக்க, கடைசிக் கட்டத்தில் ஜானி பேர்ஸ்டோ வேலை மிகவும் எளிதானது.

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜானி பேர்ஸ்டோ பேசும் பொழுது “நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். அவர்களுக்கு பவர் பிளேவில் சுனில் நரைன் சிறப்பாக விளையாடியது போல, நாங்களும் ஆரம்பத்தில் ரன் அடிக்க வேண்டும் என்று தெரியும். நீங்கள் இந்த வடிவத்தில் ரிஸ்க் எடுத்து ஆக வேண்டும். 200 ரன்களுக்கு மேல் துரத்தும் பொழுது ரிஸ்க் எடுக்காமல் வெற்றி பெற முடியாது. இப்படியான ரன் துரத்தலில் பந்து உங்களிடம் இருந்தால் அடிக்க வேண்டியதுதான்.

- Advertisement -

இதையும் படிங்க : வெளியே இருக்கப்பவே தெரிஞ்சது.. சுனில் நரைனை வச்சு ஒரு பிளான் போட்டு முடிச்சிட்டேன் – ஷஷான்க் சிங் பேட்டி

இலக்கை அடைவதற்கு அதிரடியாக விளையாடி சில குறிப்பிட்ட விக்கெட்டுகளை இழக்க விரும்பினோம். ஷஷாங்க் சிங் இந்த சீசன் முழுவதிலும் இதைச் செய்திருக்கிறார். அவரைப் போன்ற ஒருவர் உள்ளே வந்து இதை செய்வது நம்ப முடியாத ஒன்று. அவர் இளைஞர் கிடையாது, ஆனால் அவர் புத்திசாலி மிகவும் அமைதியாக இருப்பதோடு நல்ல பையன். அவர் கிளீன் ஹிட்கள் அடித்த விதத்தில் எல்லா பெருமையும் அவருக்கே சேரும்” என்று கூறியிருக்கிறார்.