“ரோகித் சர்மா தோனியின் இந்த ஐடியாவை ஃபாலோ செய்யனும்.. அப்பதான் ரன் வரும்” – மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
68
Dhoni

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது உள்நாட்டில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியை தோற்று ஒரு போட்டியை வென்று இருக்கிறது.

தற்பொழுது இந்தத் தொடர் சமநிலையில் இருந்தாலும் கூட இந்திய அணிக்கு கவலை அளிக்கும் கூடிய விஷயமாக இந்திய அணியின் பேட்டிங் இருந்து வருகிறது.

- Advertisement -

நம்பிக்கை அளிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் வீரராக ஜெய்ஸ்வால் மட்டுமே இந்திய அணிகள் இருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் கில் சதம் அடித்திருந்த போதும், அவரது பேட்டிங் அணுகுமுறை நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இல்லை.

குறிப்பாக துவக்க வீரராக வரும் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல முறையில் ரன்கள் அடிக்கக்கூடியவர். ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், தற்பொழுது இங்கிலாந்து வேலைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

அவர் கேப்டனாக இருப்பதால் இப்படி பேட்டிங் பாதிக்கப்படுகிறதா?என்பது குறித்தும், மேலும் அவர் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை முதலில் நிலைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மகேந்திர சிங் தோனியை உதாரணம் வைத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கேப்டனாக தாக்கத்தை கொடுக்க முயற்சி செய்வதில் ரோஹித் சர்மா சிக்கிக் கொள்வதாக நான் நினைக்கிறேன். முதலில் ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும். அடுத்துதான் கேப்டனாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கேப்டனாக இருக்கும் பொழுது பல விஷயங்கள் உங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

சரியான விஷயங்களை அவர் செய்ய முயற்சி செய்ய வேண்டும். மேலும் மகேந்திர சிங் தோனியின் வார்த்தையை அவர் ஃபாலோ பண்ண வேண்டும். நீங்கள் பிராசஸில் கவனம் செலுத்தி, உங்களது வேலை முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் பேட்டிங் மட்டும்தான் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள விஷயம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் பேட்டிங் செய்தது போல் ரோகித் சர்மா மீண்டும் மாறினால், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பார்த்த ரோஹித் சர்மாவை மீண்டும் பார்த்தால் சிறப்பானதாக இருக்கும்.

இதையும் படிங்க : “கோலி காரணம்.. ஆனா பும்ரா சிறப்பா இருக்கறதுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு” – தெ.ஆ பிலாண்டர் பேச்சு

டெஸ்ட் போட்டிகளுக்கு மிகச் சிறப்பான பேட்ஸ்மேனாக தெரியும் ரோஹித் சர்மா போல அவர் மீண்டும் வரவேண்டும். அப்பொழுதுதான் அவரிடம் இருந்து ரன்கள் வரும்” எனக் கூறியிருக்கிறார்.