“கோலி காரணம்.. ஆனா பும்ரா சிறப்பா இருக்கறதுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு” – தெ.ஆ பிலாண்டர் பேச்சு

0
258
Virat

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் டேல் ஸ்டெயின், மோர்னே மோர்கல், வெர்னன் பிலாண்டர் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரே நேரத்தில் விளையாடிய பொழுது, தென் ஆப்பிரிக்க அணி எந்த மண்ணிலும் யாரையும் வீழ்த்தக்கூடிய அணியாக இருந்தது.

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்துவது யாருக்கும் மிகக் கடினமாக இருந்தது. மூன்று பந்துவீச்சாளர்களுமே மூன்று விதமான பாணியில் வேகப்பந்துவீச்சை கொண்டிருப்பவர்கள். மேலும் மூவருமே சாம்பியன் பந்துவீச்சாளர்கள். இந்தக் கூட்டணியை கடப்பது பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நரகமாக இருந்தது.

- Advertisement -

இதில் வெர்னன் பிலாண்டர் 2011ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட்காக அறிமுகமாகி வெறும் 9 ஆண்டுகள் மட்டுமே விளையாடி 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் இவர் இந்த ஒன்பது ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளராக இருந்தார்.

இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 64 போட்டிகள் மட்டுமே விளையாடி 2.63, எக்காணாமியில் 22.3 என்கிற பந்துவீச்சு சராசரியில் மொத்தம் 224 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இன்னும் கொஞ்ச காலம் விளையாடி இருந்தால் இவரது சாதனைகள் இன்னும் பெரியதாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சுத் துறையின் வளர்ச்சியும், ஜஸ்பரித் பும்ராவின் எழுச்சியும் எப்படி என்பது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஒவ்வொரு முறை இந்தியா சவுத் ஆப்பிரிக்கா வரும்பொழுதும், முன்பு வந்ததைவிட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு இருந்திருக்கிறார்கள். இந்திய துணைக்கண்டத்தில் விளையாடும் பொழுது அங்கு சுழல் பந்துவீச்சாளர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் தற்போதைய இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவிலும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த மாதிரி வெற்றி பெறுவதற்கான பந்துவீச்சாளர்களை உருவாக்கியது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறி. ஆனால் பின்புறமாக கேப்டன் விராட் கோலியின் பங்கும் இருக்கிறது. விராட்கோலி ஒரு வலிமையான கேப்டனாக இருந்து தனது பந்துவீச்சாளர்கள் சென்று கற்றுக் கொள்ளவும், மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

இதையும் படிங்க : “ஆண்டர்சன் கிளாஸ்.. ஆனால் பும்ரா வெறித்தனமான ஆள்.. மிரண்டுட்டேன்” – ஆஸி மைக்கேல் கிளார்க் பேச்சு

இந்த நேரத்தில் பும்ரா மிகவும் முழுமையான வேகம் பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் அற்புதமான திறமைகளை பெற்றிருக்கிறார். அவரது தற்போதைய வெற்றிக்கு காரணம், தன்னுடைய லைன் மற்றும் லென்த்தை தொடர்ந்து சரியான முறையில் வைப்பதை கற்றுக் கொண்டார். முன்பு அவர் வீசும் ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். தற்போது அப்படி இல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதால் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.