ரோகித் விராட் இல்லை.. கடினமான பிட்ச்களில் ரன் அடிக்கப் போறது இந்த இந்திய வீரர்தான் – மஞ்ரேக்கர் உறுதி

0
38
Manjrekar

ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நான்காவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் ரத்தானது.

இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரரை இர்பான் பதான் மற்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆகியோர் இவர் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடிய வீரர் என்று பாராட்டி பேசி இருக்கின்றனர்.

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அடிக்கக்கூடிய வகையிலேயே அமைந்தது என்று தான் கூற வேண்டும். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்க பூமியாக விளங்கியது. ஆனால் இத்தகைய ஆடுகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு சிறப்பான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஒன்றரை வருடங்கள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தாலும், ஐபிஎல்லில் தொடக்க ஆட்டங்களில் சிரமப்பட்டு அதற்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் பார்மை மீட்டெடுத்து தற்போது இந்திய அணியில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

யாருமே எதிர்பாராத வகையில் ரோகித் சர்மா இவரை மூன்றாவது இடத்தில் களம் இறக்கினாலும், எந்த இடத்தில் இறங்கினாலும் நான் சிறப்பாக விளையாடுவேன் என்பது போல அதிரடியான ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த முறை எப்படியும் டி20 உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று இந்திய வீரர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்திய முன்னாள் வீரர்களான இர்பான் பதான் மற்றும் சஞ்சய் மஞ்சுரேகர் ஆகியோர் ரிஷப் பண்ட் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் குறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடிய வீரர். காயத்திலிருந்து அவர் மீண்டு வந்திருக்கும் விதம் உண்மையிலேய அபாரமானது. ரிஷப் பண்ட் மீண்டு வந்திருக்கும் விதம், உண்மையிலேயே இதை விட ஒரு சிறந்த கம்பேக் யாராலும் கொடுக்க முடியாது. பண்ட் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கோலி எல்லாம் கிடையாது.. சூப்பர் 8 ரவுண்ட்ல இந்த இந்திய பேட்ஸ்மேன் கலக்க போறாரு – ஹர்பஜன் சிங் நம்பிக்கை

மற்றொரு இந்திய முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் குறிப்பிடத்தக்க வீரராக இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் நம்பர் 3ல் களமிறங்கி விளையாடுவது இல்லை. அவர் தற்போது வரை பேட்டிங்கில் எந்த ஒரு பலவீனத்தையும் காட்டவில்லை. பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளங்களில் கூட நிதானமாக எந்தப் பதட்டமும் இன்றி பேட்டிங் செய்கிறார்” என்று கூறி இருக்கிறார்.