நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான பேட்டிங் காரணமாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி தோற்கடித்தது.இந்த தோல்வி ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறவும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரை முக்கிய ஒருவருக்காக வெல்ல வேண்டும் என சேவாக் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய விதம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடியாக இருந்தது. அவர் வெறும் 19 பந்துகளில் அரை சதத்தை அடித்து, இந்த டி20 உலகக்கோப்பையில் அதிவேக அரை சதத்தை பதிவு செய்தார்.
மேலும் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி வெளியேறக் கூடியவர், இந்த முறை பவர் பிளே தாண்டி நின்று தன்னால் என்ன செய்ய முடியும் என்றும் காட்டினார். அவருடைய ஷாட் எல்லாமே அதிரடி என்பதை தாண்டி மிகவும் தரமானதாக இருந்தது. 41 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 92 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியை டி20 உலகக்கோப்பை தொடரை விட்டு அனுப்பி விட்டார்.
இது குறித்து சேவாக் கூறும்பொழுது “இந்த உலகக் கோப்பையில் இதைவிட சிறந்த பொழுதுபோக்கான ஆட்டத்தை நான் பார்க்கவில்லை. முதல் ஆறு ஓவர்கள் மட்டுமே ரோகித் சர்மா கிரீசில் இருப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால் பவர் பிளேவுக்கு பிறகும் அவர் விளையாடினார். மேலும் அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் நம் இதயங்களை மகிழ்ச்சியடைய வைத்தார். வேறென்ன செய்ய வேண்டும்!
இதையும் படிங்க : இந்தியாதான் உலக கோப்பையை ஜெயிக்கணும்.. தோல்விய ஆவேசமா மாத்தி ஆஸியை அடிச்சுட்டாங்க – சோயப் அக்தர் விருப்பம்
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சினுக்காக நாம் விளையாடினோம். இந்த முறை ராகுல் டிராவிட்டுக்காக டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். அவர் இதுவரையில் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்ததில்லை. இந்த முறை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஒரு பயிற்சியாளராக அவர் உலகக் கோப்பையை வென்ற அணியில் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.