ஆப்கான் எங்களை ஏமாத்தி வெளியே அனுப்பிடுச்சு.. இதெல்லாம் பழசு – ஆஸி ஆடம் ஜாம்பா எதிர்ப்பு

0
884
Zamba

2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் காயம் என்று நாடகம் ஆடியதாக ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜாம்பா சூசகமாக பதிவிட்டிருக்கிறார்.

இன்று பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி கொண்ட போட்டியில், ஆப்கானிஸ்தான அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி வெளியேறும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. மேலும் பங்களாதேஷ் அணி முதல் ஓவரை மிகச் சிறப்பாக பேட்டிங்கில் ஆரம்பித்தது. இதன் காரணமாக ஒன்று பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு செல்லும் இல்லையென்றால் ஆஸ்திரேலியா செல்லும் என்கின்ற சூழல் உருவானது.

இப்படியான நிலையில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு, பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான ஓவரை கடந்து விட்டார்கள். இதற்குப் பிறகு பங்களாதேஷ் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் என்கின்ற நிலை இருந்தது.

இந்த சூழலில் போட்டியில் மழை வந்தது. அப்பொழுது டகுவோர்த் லீவ்ஸ் விதியின்படி ஆப்கானிஸ்தான் அணி மூன்று ரன்கள முன்னணியில் இருந்தது. மழைக்கு நடுவர் போட்டியை நிறுத்தவில்லை.இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆட்டத்தை தாமதிக்கும்படி வீரர்களுக்கு சிக்னல் கொடுத்தார். உடனே ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் காயம் பட்டது போல் திடீரென படுத்துக் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவருக்காக உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கணும்.. இங்க இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததே இல்லை – சேவாக் பாராட்டு

தற்பொழுது இது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. குல்பதின் காயம் என்று தரையில் படுத்த வீடியோவை ஆஸ்திரேலிய வீரர் ஆடாம் ஜாம்பா பதிவிட்டு “பழைய மழை நீர்” என்று தலைப்பு வைத்திருக்கிறார். குல்பதின் செய்ததை தங்களால் ஏற்க முடியாது என சூசகமாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் இதே போல் ஆஸ்திரேலியா செய்யாததா? என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.