இந்தியாதான் உலக கோப்பையை ஜெயிக்கணும்.. தோல்விய ஆவேசமா மாத்தி ஆஸியை அடிச்சுட்டாங்க – சோயப் அக்தர் விருப்பம்

0
1164
Akthar

இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. மேலும் இன்று பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியதால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

2023 இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உட்பட அந்த அணிகள் இடம்பெற்றிருந்த எல்லோருக்குமே அது பெரிய மன பாதிப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வென்றால் அரை இறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்ததால், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டிக்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

இப்படியான சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தால். மேலும் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற, பரிதாபமாக ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் சோயப் அக்தர் “வெல்டன் இந்தியா. ஆஸ்திரேலியாவை நீங்கள் வீழ்த்தி விட்டீர்கள். இப்போது இந்த உலகக் கோப்பை உங்களுக்கானது. நீங்கள் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய முழு ஆதரவு உங்களுக்குத்தான்.துணை கண்டத்தில் உலகக்கோப்பை இருக்க வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல நீங்கள் 100% தகுதியானவர்கள்.ரோகித்நோக்கம் சிறப்பாக இருக்கிறது. அவர் கோப்பையை வெல்ல வேண்டும்.

இதையும் படிங்க : ஸ்ப்ரிட் ஆப் கிரிக்கெட்டுக்கு இந்த நாடகம் எதிரானது.. ஆப்கானிஸ்தான் செய்தது சரியா.. ரஷித் கான் விளக்கம்

இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வெற்றி. அவர்கள் வென்று இருக்க வேண்டிய உலகக் கோப்பையை தோற்ற பிறகு மன அழுத்தத்தில் இருந்தார்கள். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் ஏற்பட்ட தோல்வி உண்டாக்கிய மனச்சோர்வு தற்பொழுது ஆவேசமாக மாறி அந்த அணியை வீழ்த்தி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -