கோலி எல்லாம் கிடையாது.. சூப்பர் 8 ரவுண்ட்ல இந்த இந்திய பேட்ஸ்மேன் கலக்க போறாரு – ஹர்பஜன் சிங் நம்பிக்கை

0
174
Harbhajan

இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்று போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி முடித்துவிட்டு, மேற்கொண்டு இருக்கும் எல்லா போட்டிகளையும் விளையாட வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் குறிப்பிட்ட இந்திய வீரர் பேட்டிங்கில் மிரட்டுவார் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி இருந்து வருகிறார். எந்த ஒரு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் இதுவரையில் ஏமாற்றியது கிடையாது. 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவரே அதிக ரன்கள் அடித்த வீரராக வந்தார்.

- Advertisement -

ஆனால் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக வந்த விராட் கோலி மொத்தமாக மூன்று இன்னிங்ஸ்களில் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அத்தோடு கத்துக்குட்டி அமெரிக்காவுக்கு எதிராக அவர் கோல்டன் டக் ஆனார். அந்தப் போட்டியில் ஆடுகளத்தின் தன்மை உணர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்து அணியை வெல்ல வைத்தார். மேலும் பேட்டிங்கில் மீண்டும் வந்திருக்கிறார்.

இதுகுறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “நாம் எப்போதும் மேட்ச் வின்னர்களை பற்றி பேசுகிறோம். சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால் அவர் நன்றாக விளையாடும் நாட்களில் மேட்ச் வின்னர் ஆக இருப்பதோடு, எதிரணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கொஞ்சம் கூட இல்லாமல் செய்து விடுவார்.

சூரியகுமார் யாதவ் ஒரு ஸ்பெஷல் மற்றும் வேற லெவல் பிளேயர். அமெரிக்காவுக்கு எதிராக அவரிடம் இருந்து ரன்கள் வந்தது நல்ல விஷயம். ஒருவேளை ரன்கள் வராமல் இருந்திருந்தால் அது கவலை அளிக்கக் கூடியதாக இருந்திருக்கும். தற்பொழுது அவரிடமிருந்து ரன்கள் வருவது இந்தியாவிற்கு நல்ல அறிகுறி.

- Advertisement -

இதையும் படிங்க : கில் ஒழுங்கு மீறியதால் இந்தியா அனுப்பப்படுகிறாரா.. அவரே வெளியிட்ட சர்ச்சை பதிவு.. என்ன நடக்கிறது?

மேலும் இது இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமுக்கும் நல்ல அறிகுறி. அவர் பேட்டிங் செய்யும்பொழுது இந்திய ட்ரெஸ்ஸிங் ரூம் அமைதியாக இருக்கும். அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை வென்று விட்டுதான் வெளியே வருவார் என்று எல்லோருக்கும் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.