5வது டெஸ்ட்.. இந்திய அணியில் யாரும் யோசிச்சே பார்க்காத.. இதுவரை நடக்காத ஒரு மாற்றம்.. நடக்க வாய்ப்பு

0
1021
ICT

இந்தியாவில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சில விஷயங்கள் சமீப காலங்களில் இல்லாதது போல் புதிதாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் பெரும்பாலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கப்பட்டன. இதனால் இரண்டாவது நாளின் முடிவிலேயே, ஐந்து நாள் போட்டிக்கான முடிவு பெரும்பாலும் தெரிந்துவிடும். மூன்றாவது நாள் சம்பிரதாயத்திற்காக சில நேரம் நடைபெறும்.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்த முறை அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்வதற்கு சாதகமான தட்டையான ஆடுகளங்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அமைத்து ஆச்சரியப்படுத்தியது.

இப்படியான தட்டையான ஆடுகளத்தில் இங்கிலாந்து ஒரு புறத்தில் ரன்கள் சில நேரங்களில் எடுத்தாலும் கூட, இந்திய அணியின் இளம் வீரர்கள் இதை பயன்படுத்தி இங்கிலாந்தை விட அதிரடியாக விளையாடிய ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார்கள்.

மேலும் இந்த தொடரில் மூத்த வீரர்கள் முக்கியமானவர்கள் சிலர் இல்லாத பொழுதும் கூட, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புஜாரா, உமேஷ் யாதவ் போன்ற மூத்த வீரர்களிடம் செல்லாமல், மிகத் தைரியமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தொடரையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இதுவரையில் இந்தியா இங்கிலாந்து இரண்டு அணிகளுமே இந்த தொடரில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடி இருக்கின்றன. பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வருவதற்கு முயற்சி செய்யவில்லை.

தற்போது ஐந்தாவது போட்டி நடக்க இருக்கும் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தின் சூழ்நிலை மிகவும் குளிராக இருக்கும். இங்கு பந்து கொஞ்சம் ஸ்விங் மற்றும் சீம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே கடைசி போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் என்று செல்வதற்கான வாய்ப்புகள் அமைந்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “என் 100வது டெஸ்ட் போட்டி.. என்னை விட இவங்களுக்குதான் முக்கியம்” – அஸ்வின் உருக்கமான பேச்சு

நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட பும்ரா மீண்டும் அணிக்கு திரும்ப, அதே நேரத்தில் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடலாம். ஜடேஜா பேட்டிங் பங்களிப்பு செய்கிறார் மேலும் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டி. எனவே குல்தீப் யாதவ் வெளியில் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரில் முதல் முறையாக யாரும் யோசிக்காத மூன்று வேகப்பந்துவீச்சாளர்களோடு இந்திய அணி செல்கிறதா? என்று பார்க்க வேண்டும்.