“என் 100வது டெஸ்ட் போட்டி.. என்னை விட இவங்களுக்குதான் முக்கியம்” – அஸ்வின் உருக்கமான பேச்சு

0
159
Ashwin

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்டூவர்ட் பிராட், கோர்ட்டினி வால்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகியோர் 500 சர்வதேச விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்து இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐநூறாவது விக்கெட்டை கைப்பற்றி, இந்தச் சிறப்பு வாய்ந்த பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் உலக அளவில் 500 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் விக்கட்டை மிக வேகமாக கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் இவரே 500 விக்கெட்டை கைப்பற்றிய வேகமான பந்துவீச்சாளராக இருக்கிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மற்றும் ஒரு சிறப்பு வாய்ந்த டெஸ்ட் மைல்கல் அமைய இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இறுதி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைகிறது. கிரிக்கெட்டை விளையாட ஆரம்பிக்கும் எந்த ஒரு இளைஞருக்கும், தன் அணிக்காக வெள்ளை உடை அணிந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருக்கும். இந்தப் பெரிய கனவை நினைவாக்கியதோடு நூறாவது டெஸ்ட் போட்டி என்கின்ற பெரிய எல்லைக்கோட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாம் தேதி தொட இருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் அது குறித்தும், இந்த பயணத்தில் யார் தமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்? என்பது குறித்தும் மனம் திறந்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நூறாவது டெஸ்ட் என்பது எனக்கு முக்கியமானது. ஆனால் என்னை விட எனது பெற்றோர்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு மிக மிக முக்கியமானது. என் குழந்தைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “என் ஆட்டம் எனக்குதான் தெரியும்.. இன்னும் தவறு செய்வேன்.. உங்க வேலைய பாருங்க” – ஜோ ரூட் அதிரடி பேச்சு

இப்பொழுதும் விளையாடும் போட்டி குறித்து நான் அதில் எப்படி செயல்படுகிறேன் என்று என் தந்தை 40 போன் அழைப்புகளையாவது எடுக்க வேண்டி இருக்கிறது.இது எனக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம். ஆனால் இதில் இலக்கை விட பயணம்தான் சிறப்பு வாய்ந்தது” என்று கூறியிருக்கிறார்.