டி20 உலக கோப்பைக்கு செலக்ட்டானதும்.. சாகல் செய்த மோசமான சாதனை.. தொடரும் சோகம்

0
120
Chahal

இன்று ஐபிஎல் தொடரின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சாகல் மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

இந்த முறை டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு பக்கம் போகாமல் நேராக பேட்டிங்கை தேர்வு செய்து கொண்டது. அதே சமயத்தில் ஆரம்பத்தில் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் காணப்பட்டது. பவர் பிளேவில் அபிஷேக் ஷர்மா மற்றும் அன்மோல்ப்ரீத் சிங் விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதற்கடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் இணைந்து பொறுமையாக ஆரம்பத்தில் விளையாடி, பின்பு அதிரடிக்கு மாறி சிறப்பான முறையில் ஹைதராபாத் அணியை மீட்டுக் கொண்டு வந்தார்கள். இந்த ஜோடி 57 பந்துகளில் 96 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து அதிரடி வீரர் கிளாசன் விளையாட வர ஹைதராபாத் அணி வேகமாக மீண்டும் 200 ரன்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தது. இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமெலக்காமல் களத்தில் நின்று அதிரடியாக 32 பந்தில் 70 ரன்கள் குவித்தது. 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் அணியின் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்து ஆனால் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தார். கிளாசன் தன் பங்குக்கு 19 பந்துகளில் தலா மூன்று பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 39 ரங்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா ஏன் துணை கேப்டன்?.. கோலிய நீக்க பிளான் நடந்ததா.. அகர்கர் வெளிப்படையான பேட்டி

டி20 உலக கோப்பைக்கு ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சாகல் தேர்வாவதற்கு முன்பாக 154 டி20 போட்டிகளில் ஒருமுறை கூட 60 ரன்கள் விட்டு தரவில்லை. ஆனால் டி20 உலக கோப்பைக்கு தேர்வானதும் முதல் போட்டியிலேயே 62 ரன்கள் தாண்டி விட்டு தந்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அங்கித் ராஜ்புத் 60 ரன்கள் தந்ததே, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் தந்த அதிக ரன்கள் ஆக இருந்தது. தற்பொழுது இதை உடைத்து சாகல் மோசமான சாதனை படைத்திருக்கிறார்.