1 ரன் 2 விக்கெட்.. வின்டேஜ் புவி.. இன்ஸ்விங்கர் போல்ட்.. திகைத்துப் போன சஞ்சு சாம்சன்

0
107

ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது புவனேஸ்வர் குமாரின் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்த விதம் விண்டேஜ் புவனேஸ்வர் குமாரை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறது.

ஹைதராபாத் அணியின் சொந்த மைதானமான ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமாக இந்த மைதானம் இருந்ததால் வழக்கத்திற்கு மாறாக மெதுவான தொடக்கத்தையே சன்ரைசர்ஸ் அணி ஆரம்பித்தது.

- Advertisement -

நான்கு ஓவர்களில் 25 ரன்கள் இருந்தபோது அபிஷேக் ஷர்மா 12 ரன்களில் ஆவேஸ் கானின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து அன்மோல்பிரித் சிங் ஐந்து ரன்னில் வெளியேற 5 ஓவர்களில் 35 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தத்தளித்தது. அதற்குப் பின்னர் டிராவிஸ் மற்றும் நித்திஷ் ரெட்டி கூட்டணி ஜோடி சேர்ந்தது.

இருவரும் பொறுமையாக விளையாடியது மட்டுமில்லாமல் அவ்வப்போது ஏதுவான பந்துகளையும் பவுண்டரி மற்றும் சிக்சர்களுக்கு விளாசினர். இதில் நித்திஷ் ரெட்டியின் ஆட்டம் மிக அபாரமாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கான மிகப் பெரிய எதிர்காலமாக இருப்பார் என்று தெளிவாக இந்த போட்டியின் மூலம் தெரிந்தது. 42 பந்துகளில் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் குவித்து வெளியேற, இறுதிக்கட்டத்தில் கிளாஸன் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 42 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பின்னர் மெகா இலக்கை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

- Advertisement -

முதல் ஓவரை சன் ரைசர்ஸ் அணியின் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வீச, இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ஜாஸ் பட்லர் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சமீப காலமாக பார்ம் இன்றி தவித்து வந்த புவனேஸ்வரர் குமார் இந்த போட்டியில் மிக அற்புதமாக இன் சுவிங், அவுட் ஸ்விங் என மிகப் பிரமாதமாக பந்து வீசினார். பட்லுருக்கு பிறகு சாம்சன் களம் இறங்கிய நிலையில், புவனேஸ்வர் குமார் வீசிய ஐந்தாவது பந்தில் அபாரமான இன் ஸ்விங்கால் சஞ்சு சாம்சன் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பைக்கு செலக்ட்டானதும்.. சாகல் செய்த மோசமான சாதனை.. தொடரும் சோகம்

தனது ஸ்விங் பந்துவீச்சால் அற்புதமாக இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் பழைய விண்டேஜ் புவனேஸ்வர் குமாரை பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் தனது ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வந்த புதிதில் தனது ஸ்விங் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.