ஹர்திக் பாண்டியா ஏன் துணை கேப்டன்?.. கோலிய நீக்க பிளான் நடந்ததா.. அகர்கர் வெளிப்படையான பேட்டி

0
2582
Virat

தற்பொழுது இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருவரும், இந்திய டி20 உலக கோப்பை அணி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விராட் கோலியின் தேர்வு மற்றும் ஹர்திக் பாண்டியாவின் தேர்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

இதில் ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பது மிகவும் கடினம் என்கின்ற வகையில் பலரும் பேசி வந்தார்கள். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அவரை தேர்வு செய்ததோடு துணைக் கேப்டனாகவும் நியமித்திருக்கிறது. இதை ஹர்திக் பாண்டியாவே எதிர்பார்த்து இருப்பாரா என்று தெரியவில்லை.

இதுகுறித்து அஜித் அகர்கர் பேசும்போது “உண்மையில் நாங்கள் துணை கேப்டன் யார் என்பது குறித்து எதுவுமே விவாதிக்கவில்லை. எல்லா வீரர்களுமே நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவர் காயத்தால் சில காலம் கழித்து மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். நாங்கள் அவரிடம் பார்த்த ஒரு நல்ல விஷயம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எல்லா போட்டிகளையும் விளையாடி இருக்கிறார். மேலும் அவர் எங்களுக்காக விளையாட நடுவில் ஒரு மாதம் இருக்கிறது.

தற்பொழுது அவருக்கு மாற்று வீரர்கள் எங்களிடம் யாரும் இல்லை. மேலும் அவர் உடல் தகுதியுடன் இருந்தால் அணிக்கு என்ன கொண்டு வருவார் என்பது குறித்து மிக நன்றாக தெரியும். அவர் பந்து வீசுவது ரோகித் சர்மாவுக்கு களத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக தற்போது ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் நல்ல முறையில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 4 ஸ்பின்னர்களை செலக்ட் பண்ணதுக்கு ஒரு காரணத்தை சொல்றேன்.. மீதியை சொல்ல மாட்டேன் – ரோகித் சர்மா பேட்டி

விராட் கோலியின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் பற்றி எதுவுமே நாங்கள் பேசவில்லை. அவர் மிகப்பெரிய வீரர். மேலும் அதிர்ஷ்டவசமாக அவர் ஐபிஎல் தொடரில் நிறைய ரன்கள் குவித்து சிறப்பாக இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அழுத்தமான சூழ்நிலைகள் வரும் பொழுது அவர் மிகச் சிறப்பாக செயல்பட கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.