சஞ்சு சாம்சன் சாதாரண ஆள் கிடையாது.. அவர் எங்களுக்கு நிறைய ஏற்படுத்தி தந்திருக்காரு – சந்தீப் சர்மா பேட்டி

0
53
Sanju

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முதலில் பதிவு செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர் தனது கேப்டன் சஞ்சு சாம்சன் பற்றி பேசியிருக்கிறார்.

நேற்று டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் டிரண்ட் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியை உண்டாக்கி இருந்தாலும் கூட, திலக் மற்றும் வகையறா இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பான முறையில் மீட்டு வந்தார்கள்.

- Advertisement -

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் கடைசிக் கட்ட ஓவர்களுக்கு திரும்பி வந்த சந்திப் சர்மா மீண்டும் சிறப்பாக பந்து வீசி, மும்பை இந்தியன்ஸ் அணியை 179 ரன்களுக்கு கட்டுப்படுத்த மிகவும் முக்கிய காரணமாக இருந்தார்.

நேற்று அவர் தன்னுடைய பந்துவீச்சில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டு தந்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் இவரது இந்த பந்துவீச்சு நடப்பு ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவாகியும் இருக்கிறது.

இவர் தனது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் குறித்து கூறும் பொழுது “இது ஒரு மகிழ்ச்சியான சூழல் மற்றும் நேர்மறையானது. எங்கள் அணி மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் தரப்படுகிறது. கேப்டனாக சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் கூறுவேன். அவர் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய சுதந்திரம் தந்து, அவர்களிடமே கேட்டு, அதற்கேற்ற வகையில் ஃபீல்டிங் அமைத்துக் கொடுக்கிறார். இது பந்து வீசும் பொழுது எங்களுக்கு நிறைய பலன்களை தருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் நீ மும்பை பையன்.. மும்பை கூட மட்டுமே சதம் அடிக்கிற.. வேற யாரும் தெரியலையா – கவாஸ்கர் பேச்சு

சங்கக்கரா வெளிப்படையாக எல்லோரும் மனதையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். மேலும் வீரர்களை எப்படி ஊக்கப்படுத்துவது என்று அவருக்கு தெரியும். அதேபோல் நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் உங்களிடம் எதைப் பேச வேண்டும் என்றும் அவருக்கு தெரியும். அவர் எப்பொழுதும் சரியான வார்த்தைகளை பயன்படுத்தி சரியானதை பேசுவார். எல்லா நேரத்திலும் அவரால் இந்த விஷயம் எப்படி முடிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.