233 ஸ்ட்ரைக் ரேட்.. ரசித் கானை முதல் பந்தில் சிக்ஸர்.. 8.40 கோடி சமீர் ரிஸ்விக்கு தோனியின் ரியாக்சன்

0
1623
Rizvi

2024 ஐபிஎல் 17வது சீசனில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே அணியின் தரப்பில் தீக்ஷனா இடத்தில் பதிரனா இடம் பெற்றார்.

சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திர அதிரடியான துவக்கம் கொடுத்தார். குஜராத் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று புரியாமல் தடுமாறினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 20 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் 36 பந்தில் அவரும் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் வந்த ரகானே 12 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த நிலையில் உள்ளே வந்த சிவம் துபே ரச்சின் ரவீந்திரநா விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தார். இவருடைய பேட்டில் இருந்தும் சிக்ஸர் மழை பொழிந்தது. சிறப்பாக விளையாடிய சிவம் துபே 23 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் எல்லோரும் மகேந்திர சிங் தோனி களமிறங்குவார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். தொலைக்காட்சி திரையில் அவரது முகம் தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருந்தது. அவரும் பேட்டிங் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் சிவம் துபே ஆட்டம் இழந்ததும் எட்டு புள்ளி 40 கோடிக்கு வாங்கப்பட்ட இந்திய உள்நாட்டு 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வி விளையாட அனுப்பப்பட்டார்.

அவர் உள்ளே வந்த பொழுது பந்துவீச்சில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் தான் இருந்தார். ஆனால் சமீர் ரிஸ்வி எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தித்த முதல் பந்தையே ஸ்கொயர் லெக் பகுதியில் சிக்சர் அடித்து அசத்தினார். இதற்கு அடுத்து மீண்டும் ஒரு பந்தை தூக்கி லாங் ஆப் திசையில் சிக்ஸர் அடித்தார். ஏற்கனவே சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்க, இந்த இளம் வீரர் அதை இரண்டு மடங்கு அதிகமாக்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரச்சின் 230.. சிவம் துபே 221.. தெறி ஸ்ட்ரைக்ரேட்டில் சிஎஸ்கே சேப்பாக்கத்தில் வானவேடிக்கை

இந்த நிலையில் தன்னுடைய இடத்தில் சென்ற இளம் வீரர் அச்சமின்றி உலகின் சிறந்த பந்துவீச்சாளரை இரண்டு சிக்ஸர்களுக்கு அடித்ததை பார்த்த மகேந்திர சிங் தோனி பிடித்தபடி அதற்கு அவருடைய பாணியில் ரியாக்சன் கொடுத்தார். சிஎஸ்கே அணியின் எதிர்காலமும், தங்களுடைய தேர்வு என்றும் தப்பாது என்பது போல அது இருந்தது. சமீர் ரிஸ்வி இறுதியாக 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். முடிவில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.