ரச்சின் 230.. சிவம் துபே 221.. தெறி ஸ்ட்ரைக்ரேட்டில் சிஎஸ்கே சேப்பாக்கத்தில் வானவேடிக்கை

0
131
CSK

இன்று 17வது ஐபிஎல் சீசனின் ஏழாவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே தரப்பில் மதிஷா தீக்சனா நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் மதிஷா பதிரனா சேர்க்கப்பட்டார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சிஎஸ்கே அணியின் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்திலேயே அசமத்துல்லா ஓமர்ஸ்சாய் பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் சாய் கிஷோர் தவறவிட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சிஎஸ்கே அணியின் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தில் அனல் பறந்தது. சந்தித்த பந்துகளை பவுண்டரியின் சிக்ஸர்களுமாக மைதானத்தின் எல்லா பக்கத்திலும் பறக்க விட்டு அசத்தினார். 20 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்த அவர், எதிர்பாராத விதமாக ரஷீத் கான் பந்துவீச்சில் சகாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

இதற்கு அடுத்து உள்ளே வந்த ரகானே சுழல் பந்துவீச்சை விளையாடுவதற்கு சிவம் துபேவுக்கு வாய்ப்பு தருவதற்காக அதிரடியாக விளையாட சென்று 12 பந்தில் 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து உள்ளே வந்த சிவம் துபே சாய் கிஷோரின் ஓவரில் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு அமர்க்களம் படுத்தினார். இன்னொரு பக்கம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் 36 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 46 ரன்கள் எடுத்து ஸ்பென்சர் ஜான்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

உள்ளே வந்ததிலிருந்து அதிரடி காட்டிய சிவம் துபே தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய 22 பந்தில் அரை சதம் அடித்தார். இறுதியாக 23 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சமீர் ரிஸ்வி உள்ளே வந்த முதல் ரஷித் கான் பந்தில் சிக்சர் அடித்து, 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்சல் 20 பந்தில் 24* ரன்கள், ரவீந்திர ஜடேஜா 3 பந்தில் 7 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : என் வழி தோனி வழி கிடையாது.. புது ரூட் எடுத்த ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ட்விஸ்ட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் வரலாறு சி எஸ் கே அணி இதுவரையில் ஏழு முறை இருநூறு ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறது. இதில் ஆறு முறை சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருக்கிறது. ஒரே ஒரு முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் இங்கு 200 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.