பேபி பிறக்கப் போகுது.. மேட்சை சீக்கிரம் முடிங்க.. சிஎஸ்கேக்கு தோனியின் மனைவி வைத்த கோரிக்கை

0
43444

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி போட்டியின் போது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

சென்னை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. ஏனெனில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு இருக்கும் காரணத்தினால் சேஸ் செய்ய சுலபமாக இருக்கும் என்று நினைத்து கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ருத்ராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த டாரி மிச்சல் 32 பந்துகளில் 52 ரன்களும், ஆல் ரவுண்டர் சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர். இதில் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் 212 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணிக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது.

ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு முன்னால் இந்த இலக்கை எளிதாக எட்டி விடும் என்றே அனைவரும் கருதினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ் பாண்டே துல்லியமாக லைன் அண்ட் லெந்த் விசி இருவரின் விக்கெட்டையும் காலி செய்தார். அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணியால் எழுந்திரிக்க முடியவில்லை.

தோனியின் மனைவி வைத்த கோரிக்கை

அதிகபட்சமாக மார்க்ரம் 26 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இறுதியாக சன்ரைசர்ஸ் அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டியின் போது மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டுகளித்த மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

அதில் அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை விரைவாக முடிக்கும் படியும், அவர் அத்தையாக போவதால் அவரது உறவினரின் குழந்தையைக் காண விரைவாக செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அவரது இந்த வலைதள பதிவை தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். போட்டியின் போது அவர் பதிவிட்ட பதிவு “தயவு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை வேகமாக முடிக்கவும். குழந்தை பிறக்கப் போகிறது, விரைவில் அத்தையாக போகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் செம சம்பவம்.. மைதானத்தை யூஸ் பண்ணி சிஎஸ்கே போட்ட 3 மாஸ்டர் பிளான்.. வென்றது எப்படி?

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஏற்கனவே மூன்றாவது இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி ஒரு இடம் கீழே இறங்கி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.