ரிஷப் பண்ட் சிக்ஸர் அடிச்சதை விட.. இத செஞ்சதுதான் குஜராத் தோல்விக்கு காரணம் – சாய் கிஷோர் பேட்டி

0
115
Rishabh

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், இறுதி ஓவரின் கடைசிப் பந்து வரை பரபரப்பு நீடித்தது. இந்த போட்டியில் நான்கு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து, அந்த அணியின் வீரர் சாய் கிஷோர் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் டாசில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். டெல்லி அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்த பிறகு, அந்த அணியின் இடது கை பேட்ஸ்மேன்கள் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி மொத்தம் 68 பந்துகளில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தகாரணத்தால், அணியில் சேர்க்கப்பட்டு இருந்த, கடந்த போட்டியில் பஞ்சாபுக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற சாய் கிஷோருக்கு, கேப்டன் கில் பந்து வீச வாய்ப்பு தரவில்லை. இடதுகை பேட்ஸ்மேன்கள் இடது கை சுழல் பந்துவீச்சாளரை தாக்கி விளையாடுவார்கள் என கேப்டன் கில் இந்த முடிவுக்கு வந்தார்.

அதே நேரத்தில் அக்சர் படேல் 18-வது ஓவரில் ஆட்டம் இழக்க, 19ஆவது ஓவரை சாய் கிஷோருக்கு கில் கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் மொத்தம் 22 ரன்களை சாய் கிஷோர் கொடுத்தார். மேலும் அதில் 21 ரன்கள் வலது கை பேட்ஸ்மேன் ஸ்டப்ஸ்தான் அடித்தார். நேற்று கில் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்தது.

இந்த நிலையில் குஜராத் அணியின் தோல்வி குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த சாய் கிஷோர் கூறும் பொழுது “அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் மிக நன்றாக பேட்டிங் செய்தார்கள். ரிஷப் சிக்ஸர் அடித்ததை விட, மிகவும் நல்ல பந்துகளில் பவுண்டரிகள் அடித்தார். அதுதான் அவர்களுக்கு பெரிய உத்வேகத்தை அளித்தது. அதே சமயத்தில் கடைசி இரண்டு மூன்று ஓவர்களில் நாங்கள் பவுண்டரிகளுக்கு பதிலாக அதிக சிக்ஸர்களை கொடுத்து விட்டோம். இதனால் ஆட்டம் கைமீறி போனது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்களால பிளே ஆஃப் வர முடியும்.. இத செஞ்சு ஹைதராபாத்தை தோற்கடிப்போம் – ஆர்சிபி வில் ஜேக்ஸ் பேட்டி

ஒரே ஒரு வெற்றி எங்களை கட்டளையிடும் இடத்திற்கு கொண்டு சென்று இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் இந்த அணியின் சிறந்த அம்சம் என்னவென்றால் எல்லோரும் சுமக்கும் நம்பிக்கைதான். இவ்வளவு பெரிய ரன்களை துரத்தும் பொழுது கூட, எல்லோரும் வெற்றி பெற முடியும் என்று நம்பினார்கள். இப்படித்தான் இந்த அணி கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறி இருக்கிறார்.