எங்களால பிளே ஆஃப் வர முடியும்.. இத செஞ்சு ஹைதராபாத்தை தோற்கடிப்போம் – ஆர்சிபி வில் ஜேக்ஸ் பேட்டி

0
183
Jacks

இன்று ஐபிஎல் தொடரின் 41வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை வெல்வதோடு ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கும் வர முடியும் என, அந்த அணியின் வீரர் வில் ஜேக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையால் மற்ற அணிகளை எல்லாம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமே 260 ரன்களுக்கும் மேலாக மூன்று முறை அந்த அணி எடுத்திருக்கிறது. அவர்களது துவக்க வீரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தரக்கூடிய அதிரடியான துவக்கம் 300 ரன்கள் கூட எடுக்க முடியும் அளவுக்கு இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் சதம் அடித்த சாதனையையும் இந்த அணிக்கு எதிராக படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய போட்டி குறித்து பேசி உள்ள ஆர்சிபி வீரர் வில் ஜேக்ஸ் கூறும் பொழுது ” புதிய பந்தில் விக்கெட் எடுக்க நாங்கள் முயற்சி செய்வோம் இது நல்ல பலன் தரும் என்று நாங்கள் நினைக்கிறோம். சில போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எங்களால் பிளே ஆப் சுற்றுக்கும் வர முடியும்.

- Advertisement -

ஹைதராபாத் அணி தற்பொழுது தன்னம்பிக்கையில் மேலே இருக்கிறது. அவர்கள் 260 ரன்களுக்கும் மேலாக மூன்று முறை இந்த ஐபிஎல் தொடரில் அடித்திருக்கிறார்கள். மேலும் அனைத்து பேட்டர்களும் ஃபார்மில் இருப்பதாக தெரிகிறது. அவர்களுடைய இடத்தில் வந்து விளையாடுவது சவால் ஆனது. நாம் அவர்களை கொஞ்சம் குறைந்த ஸ்கோரிலோ அல்லது சமமான ஸ்கோரிலோ கட்டுப்படுத்தினால் நம்மால் வெல்ல முடியும்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் அடித்த சிக்சர்.. காயம் அடைந்த கேமரா மேன்.. அவருக்காக பண்ட் செய்த நெகிழ்ச்சி செயல்

ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்க நினைப்பார்கள். அவர்கள் இருவரும் என்ன திட்டம் வைத்திருந்தாலும் அதை நாங்கள் வந்து வீச்சாளர்களிடம் விட்டுவிடுகிறோம். இருவரும் பவர் பிளேவை பயன்படுத்தி அழகாக விளையாடுகிறார்கள். எனவே இவர்கள் இருவரில் ஒருவரை வீழ்த்தி, மூன்றாவது பேட்ஸ்மேனை சீக்கிரத்தில் பேட்டிங் செய்ய வர வைத்தால் வெல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -