25 ரன்னுக்கு 6 விக்கெட்.. ஆட்டம் காட்டி குஜராத்தை வென்ற ஆர்சிபி.. மும்பைக்கு நடந்த பரிதாபம்

0
1174
RCB

இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி அசத்தலான வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர் சி பி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சகா 7 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் சுப்மன் கில்லும் 7 பந்துகளைச் சந்தித்து 2 எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 14 பந்துக்கு 6 ரன் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

குஜராத் அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 37 பந்துகளுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. டேவிட் மில்லர் இந்த ஜோடியில் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஷாருக்கான் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து குறிப்பிடும்படி ராகுல் திவாட்டியா 21 பந்தில் 35 ரன், ரஷீத் கான் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். குஜராத் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிராஜ், யாஸ் தயால் மற்றும் வைசாக் விஜயகுமார் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்த இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சரவெடி துவக்கத்தை கொடுத்தார்கள். குறிப்பாக கேப்டன் பாப் டு பிளிசிஸ் 18 பந்துகளில் அரைசதம் அடித்து கலக்கினார். அவர் இறுதியில் 23 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து பவர் பிளேவிலேயே ஆட்டமும் இழந்தார்.

- Advertisement -

திடீர் பரபரப்பு

இதற்கு அடுத்து வில் ஜேக்ஸ் 1(3), ரஜத் பட்டிதார் 2(3), கிளன் மேக்ஸ்வெல் 4(3), கேமரூன் கிரீன் 1(2) ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினார்கள். இதில் வில் ஜேக்ஸ் தவிர்த்து மற்ற நான்கு விக்கெட்டுகளையும் ஜோஸ் லிட்டில் தன்னுடைய நான்காவது ஓவரில் கைப்பற்றினார். விராட் கோலியின் 27 பந்தில் 41 ரன் எடுத்து ஆட்டம் இழக்க, 111 ரன்களுக்கு ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழக்க திடீர் பரபரப்பு உருவானது.

இதையும் படிங்க : தமிழக வீரர் ஷாருக்கானுக்கு.. கோலி செய்த காரியம்.. ரசிகர்கள் விமர்சனம்.. களத்தில் என்ன நடந்தது?

இந்த நிலையில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் 12 பந்தில் 21 ரன், ஸ்வப்னில் சிங் 9 பந்தில் 15 ரன் ஆட்டம் இழக்காமல் எடுக்க, ஆர்சிபி அணி 13.4 ஓவரில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மும்பை பரிதாபமாக பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.