ஒரு டீ குடிச்சிட்டு வரதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க.. நான் தயாராவே இல்ல – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
10822
DK

நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு மிக முக்கியமான போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆரம்பித்த ஆர்சிபி, திடீரென ஆறு விக்கெட்டுகளை இழந்தது. பிறகு தினேஷ் கார்த்திக் உள்ளே வந்து ஆட்டத்தை முடித்து வைத்த விதம் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்த குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சகா 1 ரன் எடுக்க கில் 2 ரன் எடுத்து வெளியேறினார்கள். சாய் சுதர்சன் 6 ரன் எடுத்தார். இதற்கு அடுத்து ஷாருக்கான் 24 பந்தில் 37 ரன்கள், ராகுல் திவாட்டியா 21 பந்தில் 35 ரன்கள், டேவிட் மில்லர் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்கள். குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 19.3 ஓவரில் இழந்து 147 ரன் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி பவர் பிளேவில் 92 ரன் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் 23 பந்தில் 64 ரன்கள் குவித்தார். விராட் கோலி 27 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். 92 ரன்னில் இருந்து ஆர்சிபி திடீரென அடுத்த 25 ரன்களுக்கு, 6 விக்கெட்டுகளை 117 ரன்களுக்கு இழந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் 12 பந்துகளுக்கு 21 ரன் எடுத்து போட்டியை ஆர்சிபி பக்கம் மாற்றி வென்றார்.

இதுகுறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு நான் பேட்டிங் செய்யப் போவதில்லை என்று நினைத்தேன். பிறகு நான் ஒரு கப் டீ குடித்தேன். ஆனால் அதற்குள் மொத்த நிலைமையும் மாறிவிட்டது. திடீரென இப்படி மாறியதால் நான் இதற்கு கொஞ்சம் கூட தயாராக இல்லை. இதன் காரணமாக நான் திணறிப் போய் விட்டேன்.

இந்த சூழ்நிலை முற்றிலும் வேறு விதமானது. இதை எப்படி உள்ளே சென்று அணுகுவது என்று புதிதாக சிந்திக்க வேண்டி இருந்தது. அதே சமயத்தில் போட்டியை வெல்ல நிறைய பந்துகள் இருந்த காரணத்தினால், வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டி இருந்தது. ஆடுகளம் மூடி வைக்கப்பட்டு இருந்த காரணத்தினால் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் டாஸ் வென்றதும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதற்கும் கிரெடிட் கொடுக்க வேண்டும். பாப் மற்றும் விராட் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். ஆனால் முதலில் பேட்டிங் செய்திருந்தால் சில ஷாட்களை விளையாட முடிந்திருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க : 25 ரன்னுக்கு 6 விக்கெட்.. ஆட்டம் காட்டி குஜராத்தை வென்ற ஆர்சிபி.. மும்பைக்கு நடந்த பரிதாபம்

நூர் அகமது பந்துவீச்சில் ஸ்வப்னில் சிங் என்னிடம் ஸ்வீப் ஷாட் ஆடவா என்று கேட்டார், உங்களுக்கு அது நல்ல வழி என்று தெரிந்தால் நீங்கள் நிச்சயம் அதை செய்யலாம் என்று சொன்னேன். பிறகு அதன் மூலம் அவர் இரண்டு பவுண்டரிகள் கூட எடுத்தார். இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.