4 விக்கெட் விழுந்ததும் பயமாயிடுச்சு.. பவுலருக்கு ஒரு மெசேஜ் மட்டும் சொல்ல விரும்பினேன் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

0
1008
Faf

இன்று ஆர்சிபி தங்களது சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 64 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து, வெற்றி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் டாஸ் வென்றது. எதிர்பார்த்தது போலவே பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்த தொடர் முழுவதும் பேட்டிங் பிரச்சினையாக இருந்து வருவது இந்த போட்டியிலும் தொடர்ந்தது. சகா 7 பந்துக்கு 1 ரன் எடுக்க, கேப்டன் கில் 7 பந்துக்கு 2 ரன் எடுத்து இருவரும் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 20 பந்தில் 30 ரன்கள், ஷாருக்கான் 24 பந்தில் 37 ரன்கள், ராகுல் திவாட்டியா 21 பந்தில் 35 ரன்கள் எடுக்க, 19.3 ஓவர்களில் குஜராத் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிராஜ் மற்றும் தயால் இருவரும் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடி பாப் அணிக்கு கேப்டன் பாப் 23 பந்தில் 64 ரன்கள் குவித்தார். விராட் கோலி 27 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். 92 ரன்னுக்கு விக்கெட் இல்லாமல் இருந்த ஆர் சி பி அணி 117 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தில் இழுபறி உண்டானது. இந்த நிலையில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் ஆர்சிபி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளேசிஸ் “நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளாக பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறோம். களத்தில் நம்ப முடியாத அளவுக்கு திறமையாக இருந்தோம். இன்று ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக பவுன்ஸ் உடன் இருந்தது. இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டு, இதை பவுலர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் ஒரு கேட்ச் தவற விட்டோம். ஆனால் நாங்கள் இன்று முழு ஆட்டத்திலும் நல்ல முயற்சி செய்தோம். இங்கு விளையாடிய எல்லா போட்டிகளும் ஹை ஸ்கோரிங் கேமமாக இருந்தது.

இதையும் படிங்க : ஒரு டீ குடிச்சிட்டு வரதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க.. நான் தயாராவே இல்ல – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்த போட்டியிலும் 170, 180 ரன்கள் எடுத்திருந்தால் சவால் ஆன ஒன்றாக இருந்திருக்கும். நாங்கள் பேட்டிங் செய்ய செல்லும் பொழுது ஸ்கோர் கார்டு பார்க்காமல் எங்களுடைய வழியில் நாங்கள் விளையாட முயற்சி செய்ய வேண்டும். இன்று எங்களிடம் சிறந்த மதிப்பீடு எதுவும் இல்லாததால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. நாங்கள் இன்று வேகமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்த பிளான் பண்ணினோம். ஆனால் திடீரென நான்கு விக்கெட்டுகள் வேகமாக சரிந்ததும் பதட்டம் உண்டாகிவிட்டது. அப்பொழுது கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டி இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -