ரஞ்சி செமி.. ரகானே ஸ்ரேயாசை கட்டம் கட்டி தூக்கிய தமிழ்நாடு அணி.. சாய் கிஷோர் கலக்கல் பவுலிங்

0
1342
Ranji

தற்பொழுது ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் மோதி வருகின்றன.

இன்னொரு அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி மும்பை அணியை எதிர்த்து மும்பையில் வைத்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

தமிழக அணிக்கு விஜய் சங்கர் 44, வாஷிங்டன் சுந்தர் 43 ரன்கள் எடுக்க, தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மும்பை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிசை விளையாடிய மும்பை அணி நேற்று இரண்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு முசிர் கான் 55 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இன்று காலை தொடங்கிய போட்டியில் மும்பை அணி மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. இதில் நான்கு விக்கெட்டுகளை தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் கைப்பற்றி அசத்தினார். நேற்று அவர் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இந்த போட்டியில் இதுவரை மும்பை ஏழு விக்கெட்டுகளை இழந்து இருக்க சாய் கிஷோர் ஐந்து விக்கெட்டுகள் வைத்து இருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியின் அனுபவ பேட்ஸ்மேன்களான கேப்டன் ரகானே 19 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மும்பை அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் சந்தீப் வாரியர் பந்துவீச்சில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் போல்ட் ஆனார்.

இவர் விளையாட வந்ததுமே நேராக வேகப்பந்துவீச்சாளர் சந்திப்பு வாரியர் வந்தார். சில பவுன்சர் பந்துகள் வீசி செட் செய்து, பிறகு பந்தை மேலே வீசி கிளீன் போல்ட் செய்து ஸ்ரேயாஸ் ஐயரை வழியே அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க : சம்பளம் கட்.. ஸ்ரேயாஸ் மேல் அஜித் அகர்கர் கோபம் ஏன்?.. உண்மையில் என்ன நடந்தது?.. புதிய தகவல்கள்

ஆனால் இதற்குப் பிறகு இதுவரையில் விக்கெட் விழாமல் மும்பை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது சர்துல் தாக்கூர் உள்ளே வந்து அதிரடியாக 35 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.