இந்திய கிரிக்கெட் வாரியம் எப்பொழுதுமே தங்கள் அணி வீரர்கள் மீது பெரிய கெடுபிடிகளை விதிக்காது. சிக்கலான நேரங்களில் கூட அனுசரித்து செல்வதையே இயல்பாக வைத்திருக்கும்.
மேலும் இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை கேப்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும். கூடவே தேர்வுக்குழுவின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் இந்திய அணியின் கேப்டனை முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் பெரும்பாலும் இருப்பார்.
இப்படியான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கலாச்சாரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதிரடியாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவரும் சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியம் தற்பொழுது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவுகளை இந்திய அணியும் ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறது.
தேர்வுக்குழுவின் பரிந்துரை படிதான் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை சம்பளக் குழுவில் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் வெளியேற்றப்பட்டது தேர்வுக்குழுவின் முடிவு என்று தெளிவாகத் தெரிகிறது.
இஷான் கிஷான் ஏற்கனவே சம்பள பட்டியலில் இருந்து நீக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். ஆனால் திடீரென ஸ்ரேயாஸ் ஐயரும் இந்த பட்டியலில் நுழைந்தது எப்படி என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் அதற்கான உண்மையான காரணம் தெரிய வந்திருக்கிறது. நடைபெற்று வரும் ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கால் இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. அவர் காயம் என்று சொல்லியதாக முதலில் தகவல்கள் பரவியது. ஆனால் அவர் அந்த நேரத்தில் தனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பி இருக்கிறார்.
இதையும் படிங்க : “ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. இதனாலதான் துருவ் ஜூரலை தோனினு சொன்னேன்” – கவாஸ்கர் தந்த விளக்கம்
இந்த விஷயம்தான் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை மிகவும் கோபப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயரை சம்பளப் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.