டி20 உலகக் கோப்பை இன்னும் இரண்டு வார காலத்தில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சரியான பார்மில் இல்லாமல் இருக்கிறார்கள். இதுகுறித்து வெளிப்படையாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.
தற்போது ரோகித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த வருடம் அந்த அணிக்காக இவரை அதிக ரன்கள் எடுத்தவராகவும் இருக்கிறார். ஆனால் அவருடைய பேட்டிங் தரத்துக்கு இது சரியானதாக இல்லை.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது “ஒரு பேட்ஸ்மேனாக நான் என்னுடைய தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். மேலும் நான் இத்தனை ஆண்டுகளாக விளையாடிவிட்ட பிறகு, இது குறித்து அதிகமாக சிந்தித்தால், என்னால் மேற்கொண்டு விளையாடவே முடியாது என்பதும் தெரியும்.
நான் பொதுவாக நல்ல மனநிலையில் இருப்பதற்கு முயற்சி செய்கிறேன். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இந்த சீசன் நல்லபடியாக அமையவில்லை. மேலும் இந்த சீசனில் நாங்கள் பல தவறுகளை செய்தோம். வெல்ல வேண்டிய போட்டிகளைக் கூட தோற்றோம். ஆனால் இதுதான் ஐபிஎல் தொடரின் இயல்பு.
டி20 உலகக் கோப்பைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள அணி குறித்து நிறைய யோசிப்போம். ஸ்பின்னர்கள், சீமர்கள், பேட்டர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் என நாங்கள் யாரை டி20 உலகக்கோப்பைக்கு அழைத்துச் செல்வோம் என்பது எங்களுக்கு முன்பே தெரியும்.
இதையும் படிங்க : இது நாங்க விட்டுட்டு வந்த மும்பை அணி கிடையாது.. யாருக்குமே பொறுப்பே இல்ல.. ஏத்துக்க முடியல – ஹர்பஜன் சிங் பேட்டி
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மேலே கீழே என்று எல்லோருக்கும் இருக்கும். எனவே நாங்கள் ஐபிஎல் தொடரை வைத்து எதையும் முடிவு செய்யவில்லை. அணியில் வீரர்களின் பங்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து தான் நாங்கள் யோசித்தோம். அதனால் அவர்கள் அதற்கேற்ற முறையில் பயிற்சி செய்து விளையாட முடியும். இதையெல்லாமே நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் 70% வீரர்களுடன் முன்பே விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.