ரெய்னாவுக்கு கால் பண்ணேன்.. அண்ணனா மரியாதை கொடுத்து அதை டெலிட் பண்ணிட்டாரு – ஷாகித் அப்ரிடி பேச்சு

0
710
Raina

சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் சுரேஷ் ரெய்னாவை கேலி செய்த காரணத்தினால், சுரேஷ் ரெய்னா ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் எதிர்வினையாக பதிவேற்றி இருந்தார். தற்பொழுது சுரேஷ் ரெய்னா தான் கேட்டுக் கொண்டதால் அந்த பதிவை நீக்கி விட்டதாக ஷாகித் அப்ரிடி தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சுரேஷ் ரெய்னாவை ஓய்வு முடிவை ரத்து செய்துவிட்டு கிரிக்கெட் விளையாட வருவீர்களா என்று ஆகாஷ் சோப்ரா கேட்டார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த சுரேஷ் ரெய்னா நான் ஷாகித் அப்ரிடி கிடையாது என்று கூறியிருந்தார். ஏனென்றால் அவர் ஓய்வு முடிவை வாபஸ் பெற்று வந்து விளையாடியவர். இது நட்பு ரீதியிலான ஒரு நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டது.

- Advertisement -

ஆனால் சுரேஷ் ரெய்னா கூறிய இதை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தப்பாக எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக ஷாகித் அப்ரிடி டி20 உலக கோப்பை அம்பாசிடராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்த பதிவில் ஹலோ சுரேஷ் ரெய்னா என்று மீண்டும் விதமாக அவரை குறிப்பிட்டு இருந்தார். அதாவது சுரேஷ் ரெய்னாவுக்கு அப்படியான மரியாதைகள் எதுவும் கிடைப்பதில்லை என்பது போல அவர் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட சுரேஷ் ரெய்னா அதில் “நான் ஐசிசி அம்பாசிடராக இல்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இருக்கிறது. மொகாலியில் நடந்த அரையிறுதி ஆட்டம் நினைவில் இருக்கிறதா?அது உங்களுக்கு மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டு வரும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

சுரேஷ் ரெய்னாவின் இந்த பதிலடி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக சென்று கொண்டிருந்தது. இந்திய தரப்பில் இருந்து ரசிகர்கள் இதை அதிக அளவில் ஷேர் செய்தார்கள். இவர் அறையில் இதற்கு நல்ல முறையில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஷாகித் அப்ரிடி சுரேஷ் ரெய்னாவிடம் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 டி20 உலக கோப்பை.. அதிக ரன் அதிக விக்கெட் இவங்க தான் எடுப்பாங்க – ரிக்கி பாண்டிங் கணிப்பு

இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “நானும் ரெய்னாவும் பல கிரிக்கெட் தருணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அவர் மிகவும் நல்ல மனிதர். சில நேரங்களில் கேலி செய்து கொள்வதும் நடக்கும். சமூக வலைதளத்தில் அவரது பதிவை பார்த்ததும் அவரிடம் நான் பேசினேன், அவர் தம்பியைப் போல நிலைமையைப் புரிந்துகொண்டு அதை நீக்க ஒத்துக் கொண்டார். இப்பொழுது எல்லாம் நல்லபடியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.