ரசிகர்கள் எதிரா கத்துறது ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாலியாதான் இருக்கு.. அவர் எப்படிபட்ட ஆள் தெரியுமா? – இஷான் கிஷான் பேச்சு

0
204
Hardik

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் இஷான் கிஷான் 34 பந்தில் 69 ரன்கள், சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். போட்டி முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இஷான் கிஷான் ஹர்திக் பாண்டியா பற்றி பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியாவை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மீண்டும் கூச்சல் இட்டு எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் களத்தில் இருந்த விராட் கோலி அவ்வாறு செய்ய வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹர்திக் பாண்டியா இது குறித்து பெரிதாக எதுவும் நினைக்காமல், களம் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலைகள் பற்றி பேசி இருக்கும் இஷான் கிஷான் கூறும்பொழுது ” ஹர்திக் பாண்டியாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் சவால்களை மிகவும் விரும்பக் கூடியவர். உண்மையிலேயே நடக்கும் இந்த விஷயங்கள் குறித்து அவர் வெளியில் வந்து பேசக் கூடியவர் கிடையாது. அவர் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு நபர். களத்திற்கு வெளியே அவர் மிகவும் வித்தியாசமான மனநிலையுடன் இருக்கக்கூடியவர்.

மைதானத்திற்கு வரக்கூடிய ரசிகர்கள் பற்றி நாம் புகார் சொல்ல முடியாது. அவர்களுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்களும் தனிப்பட்ட பார்வைகளும் இருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு வரும் எதிர்ப்பு குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று நான் தெரிந்து கொண்டேன். உண்மையில் ஹர்திக் பாண்டியா இந்த சவால்களை விரும்பக் கூடியவராக இருக்கிறார். மக்கள் இப்படி செய்வதால் மகிழ்ச்சி அடைகிறார்.

அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கும் பொழுது மக்கள் அவரை நேசிக்க ஆரம்பிப்பார்கள். மக்கள் உங்களுடைய கடின உழைப்புக்கு மரியாதை தருவார்கள். நீங்கள் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். அவர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம், ஆனால் அது உங்களை பாதிக்கவில்லை என்று தெரிந்தால் அவர்கள் மாறுவார்கள். மேலும் இன்றைய நடக்கலாம் இல்லை நாளை இல்லை என்றால் நாளை மறுநாள் நடக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : சூர்யா பும்ரா என் கூட இருக்கிறது பாக்கியம்.. இன்னைக்கு பேசி வைக்காமயே ஒரு வேலையை செஞ்சோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

அவர் இதற்கு கோபப்படுவதை நாங்கள் பார்க்கவில்லை. அவருக்காக நாங்கள் மொத்த அணியும் இருக்கிறோம், மேலும் அணி உரிமையும் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் கூட அவர் ஆர்வமாக இருப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலை விரைவில் சரியாகும்” என்று கூறியிருக்கிறார்.