ஸ்ரேயாஷ் ஐயரால் முடியாதது.. 19 வயது சச்சின் தாஸால் எப்படி முடிகிறது?.. தந்தை கொடுத்த பேட்டி

0
214
Sachin

தற்பொழுது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியின் மிடில் வரிசையில் விளையாடி வரும் சச்சின் தாஸ் பல பேருடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 32 ரன்களுக்கு முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்ட பிறகு, சச்சின் தாஸ் விளையாடிய விதம்தான் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது.

- Advertisement -

ஒரு முனையில் நின்று நிதானமாக கேப்டன் உதய் சகரன் விளையாட, இன்னொரு முனையில் பந்துக்குப் பந்து ரன் எடுத்து ரன் ரேட்டை சரியான அளவில் வைத்த சச்சின் தாஸ் பேட்டிங் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக அவர் ஷார்ட் பந்துகளில் ஃபுல் ஷாரட் சிறப்பாக விளையாடுகிறார். சூழ்நிலைக்கு தகுந்தபடி அந்த வகையான பந்துகளை காற்றிலும் அடிக்கிறார் தரையிலும் அடிக்கிறார்.

இந்த ஷாட்டை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சர்வதேச மட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இவர்கள் சிறுவயதிலிருந்து பவுன்சர் விக்கெட்டுகளில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சர்வதேச போட்டிகளின் அனுபவம் நிறைய கிடைத்த பிறகும் கூட ஷார்ட் பந்துகளில் பெரிய பலவீனம் இருந்து வருகிறது. ஆனால் வெறும் 19 வயதான சச்சின் தாஸ் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போல ஷார்ட் பந்துகளை அனாயசமாக விளையாடுகிறார்.

அவரால் இந்த வகையான பண்புகளை எப்படி இவ்வளவு நேர்த்தியாக விளையாட முடிகிறது என்று அவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : இஷானும் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடனுமா?.. அதுவரை வாய்ப்பு தரக்கூடாதா?.. ஆகாஷ் சோப்ரா கருத்து

இதுகுறித்து சச்சின் தாஸ் தந்தை சஞ்சய் தாஸ் கூறும் பொழுது ” பயிற்சியாளர் அசார் பாய் மூன்று அடி நீளம் மற்றும் ஐந்து அடி அகலம் கொண்ட இரும்புத்தகட்டை பயிற்சியின்போது ஆடுகளத்தில் சரியான இடத்தில் வைப்பார். நாங்கள் பந்தை அந்த இரும்பு தகட்டின் மீது த்ரோ செய்வோம். அப்பொழுது பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். ஆரம்பத்தில் சச்சின் தாஸ் இதற்கு தடுமாறினார். ஆனால் பயிற்சி தொடர்ந்து கொண்டே இருந்த பொழுது அவர் இதில் முன்னேற்றம் அடைந்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.