என் முடிவை விடுங்க.. இப்படி ஆடினா ஜெயிக்க முடியாது.. தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் பேட்டி

0
271
Rishabh

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் சொந்த மைதானத்தில், இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக, 21 பந்துகளை மீதம் வைத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

இன்று டாஸ் வென்ற கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் இன்றைய ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி செய்வதாகவும் இருந்தது. இந்த நிலையில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி விக்கெட்டுகளை வரிசையாக இழந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 26 பந்தில் எடுத்த 35 ரன்கள்தான் அதிகபட்ச ரன்களாக இன்று இருந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை கொடுத்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 16 ரன்கள் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே அவுட் வாய்ப்பில் தப்பிய பில் சால்ட் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டத்தை ஏறக்குறைய முடித்து வைத்து விட்டார். இதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 33 ரன்கள் எடுக்க, அந்த அணி 16.3 ஓவரில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது.

தோல்விக்கு பின் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததை நல்ல முடிவாகவே நான் பார்க்கிறேன். ஆனால் நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக சரியாக விளையாடவில்லை. 150 ரன்கள் என்பது தேவையான ரன்களுக்கு மிகக் கீழே இருந்தது. இது கிரிக்கெட்டில் ஒரு பகுதி. நாம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : 16.3 ஓவரில் விழுந்த டெல்லி அணி.. சால்ட் காட்டடி.. சிஎஸ்கேவை புள்ளியில் முந்திய கொல்கத்தா

இன்று எங்களுடைய நாளாக அமையவில்லை. நாங்கள் செல்லும் வழி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் அதே வழியில் வெல்ல முடியாது. இன்று 40 முதல் 50 ரன்கள் குறைவாக இருந்தோம். 180 முதல் 210 ரன்கள் ஏதாவது ஒரு ரன் சரியாக இருந்திருக்கும். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவி இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக, எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதுமான ரன்கள் கொடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.