இஷானும் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடனுமா?.. அதுவரை வாய்ப்பு தரக்கூடாதா?.. ஆகாஷ் சோப்ரா கருத்து

0
98
Virat

கடந்த முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இடம்பெற்று இருந்த இஷான் கிஷான், கடைசி நேரத்தில் மனச்சோர்வு காரணமாக அணியில் இருந்து விலகிக் கொண்டார்.

ஆரம்பத்தில் ராகுல் டிராவிட் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து விளையாடும் பொழுது தேர்வுக்குழு அவரை பரிசீலிக்கும் என்பது போல பேசி இருந்தார். பின்பு தான் அப்படி செய்யவில்லை அவர் தயாராக இருக்கும் பொழுது பரிசீலிக்கும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படியான நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இசான் கிஷான் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. மேலும் முதன்மை விக்கெட் கீப்பராக கேஎஸ்.பரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கே எஸ் பரத் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்பை வீணடித்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அதுவும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்ப்பவர்களை மிகவும் கோபப்பட வைக்கும் அளவில் அவர் ஆட்டம் இழந்தார்.

இதன் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் பயிற்சியை தற்போது தொடங்கியுள்ள இசான் கிஷானையை திரும்ப அழைக்க வேண்டும் என்கின்ற கருத்துகள் வலுத்திருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” இசான் கிஷான் தனக்கு ஓய்வு கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை எந்த போட்டியிலும் அவர் பங்கேற்கவும் இல்லை. உள்நாட்டு முதல்தர போட்டிகளில் கூட அவர் விளையாடவில்லை. மனச்சோர்வு காரணமாக ஓய்வு கேட்ட அவர் தற்பொழுது மகிழ்ச்சியுடன் இருப்பார் என நம்புகிறேன்.

அவர் மீண்டும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடிய பிறகு தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை தேர்வுக்குழு அவரைக் கருத்தில் கொள்ளாது. அவருடைய துருவ் ஜூரல் விளையாட வைக்கப்படுவாரா அல்லது ஜெகதீசன் போன்ற ஒருவர் அழைக்கப்படுவாரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

ஆனால் இஷான் கிஷான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் அவர் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடினால் மட்டும்தான் அது நடக்கும். இவர் விஷயத்தில் தேர்வுக்குழு சில நடைமுறைகளை கடைபிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க :நல்லா விளையாடினாலும்.. ஸ்ரேயாஸ் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு போகனும். காரணம் இதுதான்” – ஓஜா கருத்து

இந்த இடத்தில் தற்பொழுது ஓய்வு கேட்டு சென்றிருக்கும் விராட் கோலியை வைத்து ஒப்பிட முடியாது. அவரும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டுமா? என்று கேட்க முடியாது. ஏனென்றால் இருவருக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.